இதை விசுவாசிக்கிறாயா? 60-0402 1. நாம் ஜெபிப்பதற்கு முன்பு, நான் இதைக் கூற விரும்புகிறேன், அதாவது கடந்த மாலை, அது கடந்த மாலை என்று தான் நான் நினைக்கிறேன், நான் ஒரு பெண்மணியினிடத்தில், “நமக்கு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளபடியே நீ அதை செய்வாயானால், அது…ஒரு நீர் கோவை வியாதியினால் வீங்கியுள்ள அந்த குழந்தையின் தலை சுருங்கிவிடும்” என்று கூறினேன். அந்த குழந்தையினுடைய தலையை ஒரு நூலினால் அளந்தபோது அது ஒன்றரை அங்குலம் கடந்த இரவு சுருங்கிவிட்டிருந்தது. ஆகையால் அந்தப் பெண்மணி அந்தக் குழந்தையை இங்கே இப்பொழுது கொண்டு வந்துள்ளாள். 2 இப்பொழுது சகோதரியே நான் அதைச் செய்த காரணம் என்னவெனில் அது ஒரு நோக்கத்திற்காகவேயாம். புரிகிறதா? உறுதியான ஏதோ ஒரு காரியம் சம்பவிப்பதை உங்களால் காண முடிந்தால், அது தொடர்ந்து விசுவாசிக்கும்படியான உங்களுடைய விசுவாசத்தை விருத்தியாக்கும். நான் சில சமயங்களில் சில நபரை எழுந்திருக்கும்படி, ஒன்று அல்லது இரண்டு அடி எடுத்து வைக்கும்படி, உங்களுடைய கரத்தை அசைக்கும்படி, உங்களுடைய விரலை வேகமாக அசைக்கும்படி, அவர்கள் ஏதோ ஒரு காரியத்தை வித்தியாசமாகச் செய்யும்படி ஒருகால் கேட்பதுபோல இருக்கலாம், அது சரியென்று அவர்கள் காணும்படி செய்யவேயாகும். அவர்கள் பதட்டமடைந்து, அது சம்பவிக்கப் போகிறதில்லை என்று எண்ணுகிறார்கள், ஆனால் அதுவோ எல்லா நேரத்திலுமே நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. புரிகிறதா? அது நிகழ வேண்டும். 3 இப்பொழுது எத்தனைபேர் ஜெபத்தில் நினைவு கூரப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அப்படியானால் நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்தி, “கர்த்தாவே, அதை அருளும்” என்று கூறுவீர்களா? நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. 4 கர்த்தாவே, என்னுடைய விலையேறப் பெற்ற நண்பர் பால் ரேடார் அவர்கள் எழுதின “நம்பிடுவாய்” என்ற இந்த மகத்தான சபையின் பழைய துதிப்பாடலை நாங்கள் கேட்கும்போது, தன்னுடைய தகப்பனால் சீஷர்களிடத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு பையனைக் குறித்தே நாங்கள் இப்பொழுது சிந்தித்துக் கொண்டிருக்கிறோம், இயேசு பிசாசுகளைத் துரத்தவும், வியாதியஸ்தரை சொஸ்தப்படுத்தவும் சீஷர்களுக்கு அதிகாரம் கொடுத்திருந்த பத்து நாட்களுக்குள் இங்கே அவர்கள் ஒரு காக்காய் வலிப்பு வியாதியின் பேரில் முற்றிலுமாய் தோற்கடிக்கப்பட்டிருந்தனர். நம்முடைய கர்த்தர் வருவதை அவர்கள் கண்டனர். அப்பொழுது பிள்ளையின் தகப்பன் ஓடி, “ஆண்டவரே, எங்கள் மீது இரங்கும், என்னுடைய மகன் ஒரு பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறான். நான் அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டு வந்தேன், அவர்களால் அவனைச் சொஸ்தமாக்கக் கூடாமற்போயிற்று” என்றான். 5 அப்பொழுது இயேசுவே, “நீங்கள் விசுவாசித்தால், என்னால் கூடும். விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள்” என்றீர். ஓ தேவனே, நீர் அப்பொழுதிலிருந்து ஒரு துளியும் மாற்றமடைந்திருக்கவில்லை; நீர் இன்னமும் அதேவிதமாய் நேசிக்கிற, இனிமையான, இரக்க குணமுள்ள தேவனாயிருக்கிறீர். நீர் அப்பொழுது இருந்தது போலவே, நீர் இன்றைக்கும் அவ்வண்ணமாகவே இருக்கிறீர். கர்த்தாவே, அந்த தகப்பனைப் போல, நாங்கள் யாவரும், “கர்த்தாவே, எங்களுடைய அவிசுவாசம் நீங்ககும்படி நீர் உதவி செய்யும்” என்று கதறுகிறோம். அது மிகவும் எளிமையாயுள்ளது; பிதாவே, நாங்கள் அதன்பேரில் தடுமாறுகிறோம். 6 கடந்த இரவு நீர் அந்த சிறிய குழந்தையை தொட்டதற்காக நாங்கள் உமக்கு நன்றியையும், துதியையும் ஏறெடுக்கிறோம், அந்த மண்டையோடு காண்பதற்கு வீங்கிப்போய், அந்த எலும்போ வெளியே நீட்டிக்கொண்டிருந்தது, அதுவோ கடந்த இரவு அரை அங்குலம் அமிழ்ந்து போய்விட்டது. பிதாவே, நாங்கள் அதற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். எங்களுடைய மருத்துவர்கள் அதற்காக ஆராய்ச்சில் ஒன்றையுமே கண்டறியவில்லை என்பதை நாங்கள் அறிவோம், அதற்காக அவர்களால் செய்ய முடிந்தது ஒன்றுமேயில்லை; ஆனால் நீர் இன்னமும் தேவனாய், எல்லா சூழ்நிலைகளையும் அடக்கியாள்பவராயிருக்கிறீர். பிதாவே நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்தத் தாயினுடைய விசுவாசத்திற்காகவும், இனிமைக்காகவும், தேவனுடைய மகிமைக்காக அவளுடைய சாட்சியை பொது ஜனங்களுக்குக் காண்பிக்க இந்தக் காகிதத்தின் மேல் அந்த நூலை ஒட்டித் திரும்பக் கொண்டு வந்த கீழ் படிதலுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவளுடைய சிறு குழந்தை உம்முடைய மகிமைக்காக ஒரு இயல்பான குழந்தையாய் ஜீவிப்பதாக. 7 பிதாவே, மேலே உயர்த்தப்பட்ட எல்லாக் கரங்களையும் நோக்கிப் பாரும். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தேவையை உடையவராயிருக்கிறார்கள். பிதாவே எனக்கும் தேவையுள்ளபடியால் என்னுடையதையும் கூட மேலே உயர்த்தியிருக்கிறேன். இங்குள்ள அநேகரின் தேவை, உண்மையாகவே ஜனங்களின் தேவை கடித வடிவில் இந்த பெட்டியில் இங்கு உள்ளன. அது நிறைவேறட்டும், கர்த்தாவே, ஒவ்வொருவரும் இன்றிரவு தங்களுடைய வேண்டுகோளைப் பெற்றுக் கொள்ளட்டும். நீர் எந்தக் காரியத்தையாவது கூறும் போது, அது முற்றுபெற்றுவிட்டது என்று காண்பிக்கும்படியான ஒரு உதாரணமாக இந்தத் தாயினுடைய சாட்சியை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களாக. அது…நீர்…நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதை எற்றுக் கொண்டு, அதன்பேரில் செயல்படுவதேயாகும். அது ஒரு முடிவுபெற்ற கிரியையாய் உள்ளது. 8 கர்த்தாவே, இந்தக் கடிதங்கள் ஒவ்வொன்றிற்கும் மறு உத்தரவு அருளும், இந்த உருமால்களை ஜனங்களின் மீது வைக்கப்படும்போது, அவர்கள் சுகமடைவார்களாக. பிதாவே, தங்களுடைய கரங்களை உயர்த்தின ஒவ்வொருவரும் தங்களுடைய இருதயத்தினுடைய வாஞ்சையை பெற்றுக் கொள்வார்களாக…நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம். 9 அந்தப் பெண்மணி…கொண்டுவந்துள்ள அந்த நூலை நான் இங்கே உங்களுக்குக் காண்பிக்க விரும்பினேன். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. உம்—உம். கடந்த இரவு கர்த்தர் நமக்கு பரிசுத்த ஆவியினூடாக வாக்களித்தபடியே அந்த சிறு குழந்தையினுடைய தலையானது சுருங்கிவிட்டது. அவர் அற்புதமானவரல்லவா? ஆகையால் விசுவாசமுடையவர்களாகவும், நம்பிக்கையுடையவர்களாகவும் இருக்க அது நமக்கு மிகுந்த தைரியத்தை அளிக்கிறது. 10 இப்பொழுது, இயேசு மாற்கு 11: 23-ல் அந்த மரத்தைப் பார்த்துக் கூறும்போது, “இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன்” என்று கூறினபோது, அவர் சத்தமிடாமல் கூறியிருக்கலாம், காரணம் வெளிப்படையாகக் கூறினால், அவர் அதைக் குறித்து மிகவும் கவலையற்றவராயிருந்தார்,…அதாவது அவருடைய சீஷர்களில் ஒருவர் அவர் கூறினதைக் கேட்டிருந்தனர் என்று நான் கருதுகிறேன். அது…அந்த காக்காய் வலிப்பு, அது கர்த்தராகிய இயேசுவுக்கு முன்பாக வந்தபோது, அது அந்த பையனுக்கு எப்போதும் இருந்துவந்ததைவிட கடினமானதாயிருந்தது; ஒருவேளை அவன் மரித்துப் போனவனைப் போலத் தரையிலே விழுந்து போயிருக்கலாம், ஆனால் அந்த அப்போஸ்தலர்களைக் காட்டிலும் மேலான விசுவாசத்தை உடையவராயிருந்த ஒருவரை அவன் சந்தித்துவிட்டான் என்பதை அவன் தெளிவாக உணர்ந்தான். 11 இப்பொழுது, தெய்வீக சுகமளித்தலில் விசுவாசமாயில்லாத ஒருவர் இதை கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இயேசு அசுத்த ஆவிகளை துரத்தும்படியான அதிகாரத்தை சீஷர்களுக்கு அளித்திருந்தபோதிலும், அவர்கள் தவறிப் போய்விட்டிருந்தனர். அதிகாரம் தவறிப் போயிருக்கவில்லை, ஆனால் அவர்கள் தவறிப் போய்விட்டிருந்தனர். இயேசு அவர்களிடத்தில்: “அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று” என்று சீஷர்கள் அவரிடத்தில் கேட்டனர். அதற்கு அவரோ, “உங்கள் அவிசுவாசத்தினால்தான்” என்றார். 12 சபையானது இன்னும் ஒரு அதிகாரத்தை உடையதாயிருக்கிறது. தேவன் தம்முடைய அதிகாரத்தை சபையிலிருந்து ஒருபோதும் எடுத்துக் கொள்ளவேயில்லை, ஆனால் சபையானது அதன்பேரில் செயல்பட போதுமான விசுவாசத்தை உடையதாயிருக்கவில்லை. அவ்வளவுதான். அது அப்படியே எளிமையானதாயுள்ளது. நாம் அதை சில சமயங்களில் மிகவும் சிக்கலாக்க முயற்சிக்கிறோம், ஆனால் மேலும் நீங்கள் சுவிசேஷத்தை எளிமையாக எடுத்துக் கூறும்போது, நீங்கள் உண்மையாகவே அதனோடு எளிமையைப் பெற்றுக் கொள்ளும்போது, நீங்கள் இன்னும் அதிக உண்மையைப் பெற்றுக் கொள்வீர்கள்; தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார்; அதுவே இதனை தீர்த்து வைக்கிறது; அவ்வளவுதான். அப்படியே அதை விசுவாசித்து, முன் செல்லுங்கள். 13 இயேசு, “இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன்” என்று கூறினபோது, ஏன், இலைகளோ எப்போதும் இருந்ததைப் போலவே பிரகாசமாகவும், அழகாகவும் இருந்தன. மரப்பட்டையோ எப்போதும் இருந்த விதமாகவேக் காணப்பட்டது, ஆனால் நிலத்தின் கீழிருந்த அந்த வேர்களில் இருந்த ஜீவன் மரிக்கத் தொடங்கினது. 14 ஆகையால் அது ஒரு புற்று நோயின் மேலும், நீங்கள் நினைத்துப் பார்க்க விரும்பும் எந்தவிதமான வியாதியின் மேலும் அவ்வண்ணமாகவே உள்ளது. நீங்கள் தேவனுடைய வார்த்தையை எற்றுக் கொள்ளும்போது, அந்த நோயின் வேர்களின் ஆழத்தின் கீழும் அதேவிதமாக உள்ளது, அங்கே புற்று நோயிருக்கலாம்; உங்களுடைய கரமானது விரைத்துப் போயிருக்கலாம். அதற்கு தெய்வீக சுகமளித்தலோடு எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. அது, “நீ விசுவாசித்தால்” என்று உள்ளது. புரிகிறதா? எங்கோ கீழே ஆழத்தில் அது ஏற்கெனவே கிரியை செய்யும்படிச் சென்றுவிட்டது. 15 இயேசு, “நீங்கள் இந்த மலையைப் பார்த்து; நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, நீங்கள் சொன்னபடியே நடக்கும் என்று உங்களுடைய இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், நீங்கள் கேட்டுக் கொண்டதைப் பெற்றுக் கொள்வீர்கள்” என்றார். அது அழகாயிருக்கிறதல்லவா? யாரிடத்திலிருந்து அது வருகிறது? தேவ குமாரனிடத்திலிருந்து வருகிற அவருடைய வார்த்தைகள்…வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் இப்பொழுது—ஆனால் அவருடைய வார்த்தைகள் ஒழிந்து போகாது. 16 இப்பொழுது, நீங்கள் அதைச் செய்யக் கூடிய ஒரே வழி, நீங்கள் சரியான நோக்கத்தையும், சரியான எண்ணத்தையும் உடையவர்களாயிருக்க வேண்டும். இப்பொழுது நான் இங்கிருந்து புறப்பட்டுச் சென்று, “என்னால் இந்த மலையைப் பெயர்ந்து போகச் செய்ய முடியும் என்பதை நான் உங்களுக்கு காண்பிப்பேன் என்று கூறி, ‘மலையே பெயர்ந்து போ’ என்றால் அது ஒருபோதும் பெயர்ந்து போகாது. நிச்சயமாகவே பெயர்ந்து போகாது. நான் எதை உடையவனாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அது…இருக்க வேண்டிய…நீங்கள் முதலில் தேவனுடைய சித்தத்தைக் கண்டறிய வேண்டும். 17 அதுவே காரணமாயுள்ளது, வழக்கமாக ஜெப வரிசைகளில், நான்—நான் மிகவும் கடினப்படுவது என்னவெனில், வரிசைகளினூடாக சென்ற ஏதோ ஒரு காரியத்தினால், அங்கிருந்தே நீங்கள் அந்த வியாதியைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் பாருங்கள், நீங்கள் அறிக்கை செய்யாத பாவத்தை உடையவர்களாயிருந்தால்,…நான் பொல்லாத ஆவியானது வெளியேறும்படி கேட்பதற்கு முன்பு, நீங்கள் எப்போதாவது அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை பார்த்திருக்கிறீர்களா? அந்த ஜீவியத்தில் எந்த ஒரு காரியமும் தடங்கலாயில்லாதபடி நிச்சயப்படுத்திக் கொள்ளும்படி நான் நிச்சயமாகவே அந்த சம்பவத்தை உண்மையாகவே கவனிக்கிறேன், பாருங்கள், ஏனென்றால் நினைவிருக்கட்டும், இந்த வரங்களின் பேரில், நீங்கள் அவர்களோடு தொல்லைக்குள்ளாகக் கூடும். 18 ஒரு சமயம் உங்களுக்கு நினைவிருக்கட்டும், தேவன் ஒரு தீர்க்கதரிசியை அளித்து…ஒரு மனிதனை ஒரு தீர்க்கதரிசியாக ஏற்படுத்தி, மோசேயை, அங்கு போய், கன்மலையண்டைப் பேசும்படிக் கூறினார். தீர்க்கதரிசி முற்றிலுமாய் உணர்ச்சிவசப்பட்டு, அங்கிருந்து புறப்பட்டு போய், அந்தக் கன்மலையை அடித்தான். கிறிஸ்து இரண்டாம் முறை மரிக்க வேண்டும் அல்லது இரண்டாம் முறை அடிக்கப்பட வேண்டும் என்று கிறிஸ்துவை பலவீனப்படுத்துவதுபோல பேசிவிட்டான். அவன் தண்ணீரைக் கொண்டு வரும்படியான வல்லமையை உடையவனாயிருந்தான், ஆனால் அது தேவனுடைய சித்தமாயிருக்கவில்லை. 19 எலியா மொட்டைத் தலையனாயிருக்கிறான் என்று பிள்ளைகள் அவனைக் கேலி செய்து கொண்டிருந்தபடியால், அவன் அதைச் செய்ய வேண்டியதாயிற்று என்று நான் கருதவில்லை, அவன் போய் அவ்வாறு செய்தது தேவனுடைய சித்தமாயிருந்தது என்று என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான், அவன் கோபமடைந்திருந்தான். அவன் அந்தப் பிள்ளைகளைச் சபித்தபோது, இரண்டு பெண் கரடிகள் அந்த நாற்பத்திரண்டு அப்பாவிச் சிறு பிள்ளைகளைக் கொன்று போட்டன. பார்த்தீர்களா? ஆனால் அவன் அதைச் செய்திருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அது அப்படியே—அப்படியே…நாம்… 20 தேவன் தம்முடைய சபையை வல்லமையில் வைப்பதற்கு முன்பு, அது என்ன செய்யும் என்று காணும்படியாக அவர் தம்முடைய சபையை சோதிக்கிறார் என்று நான் இன்றைக்கு நம்புகிறேன். 21 நாம்…அடுத்த முறை, ஒருக்கால், கர்த்தருக்குச் சித்தமானால் நான் திரும்பி வரும்போது, நாம் அதைப் போன்ற ஒரு காரியத்தின் பேரில், சம்பவிக்கப் போகிற ஏதோ ஒரு காரியத்தின் பேரில் தரித்திருக்கும்படி நமக்கு நேரம் உண்டாயிருக்கும், அப்பொழுது நாம் அதைக் குறித்து அதிகமாக அறிந்து கொள்வோம். 22 ஆனால் நீங்கள் வார்த்தைக் கூறினால், “கர்த்தாவே, நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறி சந்தேகப்படாமல், அதை உங்களுடைய இருதயத்தில் பொருட்படுத்திக் கூறுங்கள்… 23 இப்பொழுது, உதாரணமாக கூறுவோமானால், நான் ஒரு பள்ளத்தாக்கில் இருந்தேன், நான்…நான் கோடிக்கணக்கான ஜனங்களுக்கு பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் அங்குள்ள மலைக்கு குறுக்கே உள்ள நூறு பேரைக் கொண்ட மக்கள் குழுவினர் இருக்கின்றனர். அவர்கள் கிறிஸ்துவை அறியாமல் மரித்துக் கொண்டிருக்கின்றனர். நான் இங்கு பிரசங்கிக்க பத்து இலட்சம் பேரை உடையவனாயிருக்கிறேன், ஆனால் அதே சமயத்தில், என்னுடைய இருதயத்தில் உள்ள ஏதோ ஒன்று, என்னிடத்தில், “அந்த ஜனங்களண்டைப் போ. அவர்களிடம் போ. அவர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. நானாகவே அங்கு போக விரும்பவில்லை, ஆனால் அதே சமயத்தில் எனக்குள்ளாக ஏதோ ஒன்று உள்ளது. பாருங்கள், ஆகையால் அது தேவன் அசைவாடுவதாகும். பாருங்கள், நோக்கம் என்னவென்று பார்ப்பீர்களேயானால், அங்கு செல்வதன் நோக்கம் என்னவென்றால், சுயமாய் செல்வதல்ல…இப்பொழுது, நான், “பரவாயில்லை…” என்று கூறினால்…அங்கு செல்வதற்கான என்னுடைய நோக்கம் சரியாயிருக்குமானால், ஆனால் அதன்பின்னர் நான் இங்கிருந்து புறப்பட்டு, அங்குள்ள ஒரு பெரிய மலையைச் சென்றடைகிறேன் என்று வைத்துக் கொள்வோம். மேலும் நான், “உங்களுக்குத் தெரியுமா, நான் அந்த மலையைச் சென்றடைந்து, அந்த நூறு பேரையும் இரட்சிப்பேனானால், என்றோ ஒரு நாள் அவர்கள் அங்கே சகோதரன் பிரான்ஹாம், மகத்தான மிஷெனரி என்ற ஒரு சிலையை வைப்பார்கள்” என்று கூறினால், என்னுடைய நோக்கம் சரியானதல்ல. அந்த மலையும் விழாது. இல்லை ஐயா. 24 ஆனால் என்னுடைய நோக்கமும் குறிக்கோளும் சரியாக இருக்கும்போது, என்னுடைய இருதயத்தில் உள்ள தேவன் என்னை வழிநடத்திக் கொண்டிருக்கும்போது, என்னால் மலையைக் கடந்தும் செல்ல முடியாது, மலையைச் சுற்றியும் செல்ல முடியாது, மலையின் கீழாகவும் செல்ல முடியாது, அப்பொழுது நான், “மலையே பெயர்ந்து போ” என்று கூறுவேன். ஒருகால் அது…நான் அதைக் கூறும்போது, தேவனுடைய சித்தத்தில் பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்பட்டு, சரியான விதமான ஒரு ஆவியில் நான் அதைக் கூறும்போது, அந்த மலையின் மண் ஒரு சிறு கரண்டியளவு சரியாலாம், ஆனால் அது அதனுடைய நகரும் பாதையின் உள்ளது. அதற்கு அடுத்த நாள் இரண்டு பவுண்டுகள் சரியலாம். அதற்கு அடுத்த நாள் கால் டன் அளவு சரியலாம். ஒருகால் ஒரு மாதத்தில் ஐந்து டன்கள் சரிந்து போகலாம். அதைக் குறித்து என்ன? அதே சமயத்தில் அது சரிவது காணப்படாமலும் கூட இருக்கலாம், ஆனால் அது தன்னுடைய பாதையில் பெயர்ந்து போய் கொண்டிருக்கிறது. நான் அங்கேயே தரித்திருந்து, அந்தக் காரியம் செய்யப்படுவதைக் கவனிக்கிறேன், ஏனென்றால் தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார், அது அதனைத் தீர்த்து வைக்கிறது. 25 இன்றிரவு அங்குள்ள உங்களுடைய தாயாரைக் குறித்து உங்களால் சிந்தித்துப் பார்க்க முடிகிறதா? சரி, நீங்கள் அதை நினைத்தால், அவள் குணமடைந்துவிடுவாள். சரி. அதாவது நீங்கள் அதை அப்படியே விசுவாசித்தால்; வார்த்தையை உரைத்து, அதனோடு தரித்திருங்கள். புரிகிறதா? அதை அப்படியே விசுவாசியுங்கள்; அதில் நிலைத்திருங்கள். அது நித்திய ஜீவனாயுள்ளது. 26 இப்பொழுது நாளை பிற்பகல்…நான் பேச விரும்புகிறேன் என்றும், ஜெப அட்டைகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் நான் பில்லியிடம் இன்றிரவு கூறினேன். நான் சத்தியத்தை கூறிக் கொண்டிருக்கிறேன், நான் ஜனவரி மாதத்திலிருந்து கடல் கடந்து அயல் நாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கிறேன், பின்னர் பீனிக்ஸில் உள்ள வீட்டிற்கு திரும்பிச் செல்வேன், எல்லாமே முற்றிலுமாக…அந்த பகுத்தறிதல்…சில சமயங்களில் நான் எங்கே நின்று கொண்டிருக்கிறேன் என்பதை அறியாத அளவிற்கு நான் மிகவும் பலவீனமாகிவிடுகிறேன். அது என்னை அப்படியே பிழிந்தெடுத்துவிடுகிறது. 27 அதன்பின்னர் நான் செல்ல வேண்டியதாயுள்ளது, அவர்கள் நீங்கள்—சகோதரர்களாகிய நீங்கள் இன்னும் சில நாட்கள் தரித்திருக்கும்படிக்கே என்னை அழைத்தீர்கள். நான் அதை எவ்வளவாய்ப் பாராட்டுகிறேன். இது இங்குள்ள ஒரு கூட்ட அற்புதமான ஊழியர்கள் என்றே நான் நிச்சயம் கருதுகிறேன். நாம் இன்னும் சற்று நேரம் அதிகமாக ஐக்கியங்கொள்ள முடிந்தால் நலமாயிருக்கும். கர்த்தருக்குச் சித்தமானால், நான் எப்பொழுதாவது திரும்பி வருவேன். அப்பொழுது வேறெந்த காரியத்தையும் செய்யாமல், ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு சென்று, பட்டினம் முழுவது சுற்றி உங்கள் எல்லோரையும் சந்திப்பேன். நான் அதைச் செய்ய மகிழ்ச்சியடைவேன்; தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உதவ முடிந்த எந்த காரியத்தையும் நான் செய்வேன், நீங்களும் அதையே எனக்கு செய்ய விரும்பினால் நலமாயிருக்கும். எப்பொழுதாவது திரும்பி வரும்போது, நீங்களும் எங்களோடு இணைந்தால், நாம் ஒரு அருமையான நல்லக் கூட்டத்தை எங்காவது நடத்தலாம். 28 சகோதரர்களே, நினைவிருக்கட்டும், நான் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பேன். அந்த ஒரு காரியம் நிச்சயமானது. நீங்கள் எல்லோரும், நீங்கள் எல்லோரும் எனக்காக ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 29 இப்பொழுது நான்—நான்…நாளை காலை சபை ஆராதனைகள் பட்டிணத்தைச் சுற்றிலும் உள்ள இந்த வெவ்வேறு அருமையான சபைகளில் நடக்கும் 30 இப்பொழுது, ஜெபர்ஸன்வில்லிலிருந்து வந்துள்ள சில குழுவினர் இங்கிருக்கின்றனர். என்னுடைய நண்பர்களில் சிலர், என்னுடைய சபை தர்மகர்த்தாக்களில் ஒருவர் இங்கிருக்கிறார், சகோதரன் பிரட் சாத்மன். நான் அவரைக் கூட்டத்தில் பார்க்க முடியாமலிருந்து வருகிறேன். சகோதரன்…ஓ, என்னுடைய மற்ற அநேக நண்பர்களும் அங்கே ஜெபர்ஸன்வில்லிருந்து வந்துள்ளனர், என்னுடைய…என்னுடைய செயலாளர் மற்றும் எல்லோருமே இங்கே எங்கோ கூட்டத்தில் இருக்கின்றனர். நான் அவர்களை இன்னும் பார்க்கவேயில்லை. 31 சகோதரர்களே, இங்கே இந்தப் பட்டிணத்தில் அருமையான சபைகள் உள்ளன. ஆகையால் வருகையாளர்களாகிய நீங்கள் எல்லோரும், அந்த அருமையான சபைகளில் ஒன்றைக் கண்டுபிடித்து, நாளை அந்த சபைகளுக்குச் செல்லுங்கள். அவைகள் உங்களுக்கு நன்மையாயிருக்கும் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். அவர்கள் இந்தவிதமான ஒரு ஊழியத்தில் விசுவாசமாயிருக்கிற சகோதரர்களாய் இருக்கின்றனர். அந்தக் காரணத்தினால்தான் அவர்கள் இங்கே மேடையின் மேலும், இங்கே கீழே உள்ள இடங்களிலும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அதில் விசுவாசம் கொண்டுள்ளனர். நான் அந்த மனிதர்களைப் பாராட்டுகிறேன். 32 கர்த்தர், இங்கே இந்த கூட்டத்திற்கு ஆதரவளித்த இந்த முழு சுவிசேஷ வர்த்தக புருஷருடைய குழுவினை ஆசீர்வதிப்பாராக. அங்கே…அது சரியானது என்று நான் நம்புகிறேன், அதாவது கூட்டத்திற்கு ஆதரவளித்தது. நான்—நான் அவர்களுடைய ஏராளமான ஆதரவாளர்களிடம் செல்கிறேன், ஏனென்றால் அங்கே உள்ளே…நாம் இந்த விதமாய் இருக்கக் கூடாது, ஆனால் அநேக சமயங்களில், ஒரு மனிதன் ஏதோ ஒரு சிறு காரியத்தை, மற்ற சிறிய ஒரு காரியத்தை விசுவாசிப்பது போல சகோதரர்கள் சில சிறு வித்தியாசனமான காரியங்களை விசுவாசிக்க அனுமதிக்கிறார்கள்…அது முன்னர் எனக்கு உண்டாயிருந்த பழைய புண்களில் ஒருவிதமான காயம் உண்டுபண்ணும்படியான ஒரு சிறு உராய்வினை உண்டு பண்ணுகிறது. அது இந்த நேரத்தில் குணமாக்கப்பட வேண்டும், ஆனால் அது—அது…நீங்கள்—நான் முழு சுவிசேஷ வர்த்தகப் புருஷரண்டை வருவேனானால், அப்பொழுது அது அந்தக் காயத்தின் மீது கட்டும்படியான ஒருவிதமான உதவியைச் செய்கிறது, நாம் ஒன்று சேருகிறோம், நாம் உண்மையாகவே ஒன்று சேர்ந்த ஐக்கியத்தையும், உண்மையாகவே நன்மையான நேரங்களையும் உடையவர்களாயிருக்கிறோம். நாங்கள் அதைப் பாராட்டுகிறோம். தேவன் அந்தக் குழுவினரை ஆசீர்வதிப்பாராக. தேவன் அதை ஒரு நோக்கத்திற்காக எழுப்பினார் என்றே நான் விசுவாசிக்கிறேன். 33 இப்பொழுது…அன்றொரு நாள் சகோதரன் ஓரல் ராபட்ஸினுடைய இடத்தைக் காணும் பெரும் சிலாக்கியம் எனக்கு உண்டாயிருந்தது. என்னே, அப்பேர்ப்பட்ட ஒரு மிகப்பெரிய இடம், அப்பேர்ப்பட்ட ஒரு அழகான காரியம். அது—அது பெந்தேகோஸ்தேவுக்கு ஒரு ஞாபகச் சின்னமாயுள்ளது. 34 அதன்பின்னர் நான் சகோதரன் டாமி ஆஸ்பர்ன் அவர்களுடைய இடத்திற்குச் சென்றேன், மற்றொரு அற்புதமான ஸ்தலம், அற்புதமான தேவனுடைய மனிதன்,…சகோதரன் டாமியும், நானும் நெருக்கமானவர்கள், சகோதரன் ஓரல் அவர்களும் கூட, உண்மையாகவே நெருங்கின சகோதரர்களாய் இருக்கிறோம், நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம், ஜனங்களுடைய நன்மைக்காக தேவனுடைய ராஜ்ஜியத்திற்கென எங்களால் முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் சிறந்த முறையில் செய்ய முயற்சிக்கிறோம். 35 ஆகையால் நான் நிச்சயமாகவே இந்தப் பட்டிணத்தில் இங்கு உள்ள அந்த மனுஷரையும், மற்றும் நீங்கள் பெற்றுள்ள இந்த மற்ற அருமையான மனுஷர்களையும் பாராட்டுகிறேன். ஆடுகளாகிய நீங்கள் அற்புதமான மேய்ப்பர்களைப் பெற்றுள்ளீர்கள். நான் அப்படியே, நான் அதை அந்த விதமாகவேக் கூறுவேன். கர்த்தர் உங்கள் எல்லோரோடும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமாயுள்ளது. இப்பொழுது நாளை பிற்பகல், நான்…சகோதரர்களே, எந்த நேரத்தில் ஆராதனை துவங்குகிறது? இரண்டு முப்பது. எனவே அவர்கள் மற்ற ஆராதனைகளால் தடைபடாதபடி நாம் ஒன்று—ஒன்று அல்லது ஒன்று முப்பது மணிக்கு நீங்கள் இங்கு இருக்க வேண்டும் என்று கூறுவோமாக. 36 இப்பொழுது, பையன்கள் உங்களிடத்தில் ஏற்கனவே கூறியிருக்கவில்லையென்றால், இன்றிரவு அவர்கள் சில புத்தகங்கள், புகைப்படங்கள், ஒலி நாடாக்கள், கூட்டங்களில்…பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவுகளை வைத்திருக்கின்றனர். அவர்கள் அவைகளை விற்கிறார்கள். ஆனால் நாங்கள் அவைகளை அவர்கள் நாளை ஓய்வு நாளில் விற்க அனுமதிக்கமாட்டோம். நாளை எந்த புத்தகங்களோ அல்லது வேறெந்த காரியமோ விற்கப்பட மாட்டாது. எனவே நாங்கள் அனுமதிக்கமாட்டோம்—நாங்கள் அதை ஒருபோதும் அனுமதித்ததில்லை. அநேகர், “நீங்கள் மிக மோசமான தவறைச் செய்கிறீர்கள்…” என்றனர். 37 வயோதிக தந்தை பாஸ்வர்த் அவர்கள் வழக்கமாக என்னிடத்தில், “ஓ, சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் அங்கு தவறாயிருக்கிறீர்கள்” என்று சொல்வார். ஆனால் அந்தவிதமாகவே செய்யக்கூடாது என்னே நான் உணருகிறேன், (புரிகிறதா?) நான்—நானே உணருகிறேன். உங்களுக்கு ஒன்று தேவையானால், அப்பொழுது அவர்கள் உங்களுக்கு ஒன்றைத் தருவார்கள், ஆனால் நீங்கள்…ஆனால் நாங்கள் ஓய்வு நாளில் அதை விற்கமாட்டோம். இல்லை. அவ்வளவுதான். நான் அதை விசுவாசித்தால், நான் அதன்படி ஜீவிக்க வேண்டும். அப்படியே…நானே அதன்படி ஜீவிக்க வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? நான்—நான் என்னுடைய நம்பிக்கைகளோடு ஜீவிக்க வேண்டும், எனவே…அல்லது நீங்கள் வீட்டிற்கு, வீட்டிற்கு அனுப்ப, அந்த இடத்தில் அதைப் பெற்றுக் கொள்ளலாம். 38 இப்பொழுது இன்றிரவு, ஓ, நாம் யாவரும் அதை அப்படியே மறந்துவிடுவோம், ஓ, அதாவது செய்யப்பட்ட வேண்டிய எந்த வேலையானாலும், அல்லது வேறெந்த காரியமானாலும் அல்லது நாளின் பாடுகளை மறந்து விடுவோமாக. நாம் எல்லாவற்றையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு சில நிமிடங்கள் வார்த்தைக்குள்ளாக நோக்கிப் பார்ப்போமாக. தேவன் தம்முடைய வார்த்தையினூடாக நம்மிடத்தில் என்ன பேசவுள்ளார் என்பதைப் பார்ப்போமாக. தேவன் நமக்கு இன்றிரவு மிகவும் மகத்தான ஆசீர்வாதங்களைத் தருவாராக என்றே நான் ஜெபிக்கிறேன். 39 ஜீன், நீங்கள் எனக்காக அவளை கடத்திச் செல்ல முடியுமா? நீங்கள் எனக்காக அந்த சிறு பெண்ணை கடத்திச் செல்ல முடியுமா? அவள் ஒரு அழகான குட்டிப் பெண்ணாயிருக்கிறாளல்லவா? நீங்கள் என்னோடு வீட்டிற்கு வந்து, கிட்டத்தட்ட இந்த அளவு உயரமுள்ள என்னுடைய குட்டி சாராளோடு விளையாட விரும்புகிறீர்களா? ஓ, நீங்கள் விரும்புகிறீர்களா? நானும்—நானும் உங்களைப் போல விரும்புகிறேன். அவள் கிட்டதட்ட உங்களுடைய அளவேயிருக்கிறாள், அவள் அப்பாவினுடைய குட்டிப் பெண். உம்—ஊம். ஹம். என்னால் உங்களிடம் உறுதியாகக் கூற முடியும்—நீங்கள் உங்களுடைய தந்தையை அதிகமாய் நேசிக்கிறீர்கள், நீங்கள் நேசிக்கவில்லையா? தாயையுமா? ஓ, நிச்சயமாகவே நீங்கள் நேசிக்கிறீர்கள். அந்த அழகான சிறு பெண், நான் இங்கே அமர்ந்து நோக்கிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். சிறிய கண்களோ ஒரு போர்வையில் உள்ள எரிந்துபோன இரண்டு துளைகளைப் போலக் காணப்படுகின்றன மற்றும் சிறு பழுப்பு நிற தலைமுடி. 40 நான் சிறு பிள்ளைகளை நேசிக்கிறேன். எனக்கு வீட்டில் இரண்டு சிறு பெண்பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் ஒருவள் ரெபேக்காள், மற்றொருவள் சாராள். 41 இங்கே கொஞ்ச நாட்களுக்கு முன்னர், நான் தூரமாகச் சென்றிருந்தேன். அவர்கள் இருவருமே அப்பாவினுடைய சிறிய பெண் பிள்ளைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் அவர்களை நேசிக்கிறேன். அவர்கள் வீட்டிற்குள் வந்தவுடனே, நான் அவர்களை உப்பு மூட்டையைப் போல என் முதுகில் ஏற்றிக் கொண்டு நடக்க வேண்டும்…பெக்கியோ பெரியவளாகி மிகவும் பருமனாக இருக்கிறாள், அவள் என்னளவு பருமனாகி பெரியவளாயிருக்கிறாள். அவள் இப்பொழுது என்னுடைய முதுகை உடைத்துவிடுவாள்; அவள்…ஆனால் எப்படியாயினும் அவள் இன்னமும் அப்பாவினுடைய சிறு பெண் பிள்ளையாகவே இருக்கிறாள். இப்பொழுது, ஏறக்குறைய இன்னும் ஒரு வருடத்தில் நாங்கள் அவளை எங்காவது வேதாகம பள்ளியில் சேர்க்க விரும்புகிறோம், அதாவது பொது பள்ளியிலிருந்து தூரமாக உள்ள பள்ளியில் சேர்க்க உள்ளோம். 42 ஆகவே அவர்கள் அப்பா வீட்டிற்கு வர காத்துக் கொண்டிருந்தனர், உங்களுக்குத் தெரியும், நான் கூட்டங்களில் இருந்து கொண்டிருந்தேன். அடுத்த நாள் இரவு அவர்கள் எனக்காக நள்ளிரவு வரை வீட்டிற்குள் நுழைகிறேனா என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆகவே நான் காலை கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு மணிக்கு உண்மையாகவே வீட்டிற்குள் நுழைந்தேன். அப்பொழுது அவர்களுடைய அம்மா வாசலண்டை வந்து என்னை உள்ளே அழைத்து சென்றாள். நானோ மிகவும் சோர்வுற்று களைத்துப் போயிருந்தேன், நான்…இங்கே மேடையின் மேல் நான்…அபிஷேகிக்கப்பட்டிருக்கும்போது, அது என்னை அருமையாக உணரச் செய்கிறது, ஆனால் அந்த அபிஷேகம் உங்களை விட்டுச் செல்லும்போது, அங்குதான் நீங்கள் தொல்லைக்குள்ளாகிறீர்கள். எத்தனை பேர் அதை அறிந்திருக்கிறீர்கள்? நிச்சயமாகவே அதுதான் காரணமாயுள்ளது. 43 பாருங்கள். எலியா மலையின் மேல் ஏறிச் சென்று, வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்தான், வானத்திலிருந்து மழையை வரவழைத்தான். அதன்பின்னர் தேவனுடைய ஆவி அவனை விட்டுச் சென்றபோது, அவன் வனாந்திரத்தில் நாற்பது நாட்கள் அலைந்து திரிந்தான். தேவன் அவனைக் கண்டு அங்கிருந்த ஏதோ ஒரு குகைக்குள் அழைத்துகொண்டார். 44 யோனா, அவன் சமுத்திரத்தின் அடியில் சென்று, ஒரு பெரிய மீனின் வயிற்றில் மூன்று இராப்பகல் தங்கியிருந்தான், அதன்பின்னர் அது அவனை கரையின் மேல் கக்கினபோது, அவன் பிரசங்கிக்க புறப்பட்டு சென்றான். அப்பொழது முழு பட்டிணமே மனந்திரும்பி தேவனண்டை வந்து விட்டது. அபிஷேகம் அவனை விட்டுச் சென்றபோது, அவன் மலையின் மேல் ஏறிப்போய், தன்னுடைய ஜீவனை எடுத்துக் கொள்ளும்படி தேவனிடம் வேண்டினான். புரிகிறதா? 45 நான் அண்மையில் வில்லியம் கோப்பர், அதாவது நம்முடைய இராபோஜன ஆராதனையில் நாம் வழக்கமாகப் பாடும் இந்த கீழ்வரும் புகழ்மிக்க துதிப்பாடலை எழுதினவருடைய கல்லறையின் பக்கத்தில் நின்றேன்; இம்மானுவேலினுடைய இரத்த நரம்புகளிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தால் நிறைந்த ஒரு ஊற்று உண்டு, அங்கே…அந்த வெள்ளத்தின் கீழே பாவிகள் மூழ்கி… 46 அவருக்கு என்ன நேர்ந்தது…என்று எப்போதாவது நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? ஆவியின் ஏவுதல் அவரை விட்டுச் சென்றப் பிறகு, அவர் தற்கொலை செய்துகொள்ள ஆற்றைக் கண்டறிய முயன்றார். 47 நான் பழைய கென்டக்கி வீட்டிலிருந்து சரியாக எதிரே வசித்து வந்தபோது, அங்கிருந்த ஸ்டீபன் ஃபாஸ்டர் என்பவர் தான் அமெரிக்காவிற்கு மிகவும் புகழ்மிக்க தேசப் பாடல்களை அளித்தார். அவர் அவைகளை எழுதும்போது, அகத்தூண்டுதல் பெற்றுக்கொள்வார், அந்த அகத்தூண்டிதலினால் ஒரு பாடலை எழுதிவிட்டு, அதன்பின்னர் அவர் அதிலிருந்து வெளிவரும்போது, அவர் போய் மது அருந்துவார். முடிவிலே ஒரு வேலைக்காரனை அழைத்து, ஒரு சவரக்கத்தியை எடுத்து தற்கொலை செய்துகொண்டார். 48 ஜனங்களோ அந்த ஜனங்கள் அந்த ஆவிக்குரியப் பிரகாரமான மண்டத்திலூண்டாக சென்று ஜீவிக்கிறார்கள் என்பதை அறியாதிருக்கிறார்கள். இப்பொழுது இங்கே, உங்களால் ஒரு மலையைப் பெயர்ந்து போகச் செய்ய முடியும் என்பதுபோல நீங்கள் உணருகிறீர்கள், ஆனால் அபிஷேகம் உங்களைவிட்டுச் செல்லட்டும், அப்பொழுது அந்த வாசலினூடாக நீங்கள் புறப்பட்டுச் செல்லும்போது…உங்களை அங்குப் பற்றிப் பிடிக்க யாருமே இல்லையென்றால்,…புரிகிறதா? அப்பொழுது ஒருகால் சில மணி நேரங்களில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று அறியாமலிருப்பீர்கள். அதன் பின்னர் ஒவ்வொரு இரவும் அது மிகச் சிறந்த உங்களையும் தடுமாறச் செய்கிறது. 49 குட்டி…குட்டி சாராள் மற்றும் ரெபேக்காளைக் குறித்து நான் உங்களிடத்தில் கூற வேண்டும். ஆகவே அடுத்த நாள் காலை என்னால் உறங்க முடியாமல், நான் எழுந்து ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுது சற்று கழித்து பெரியவளாயிருக்கிற பெக்கி, அவளுக்கோ சாராளைவிட நீண்ட காலகள் இருந்தன, எனவே பெக்கி ஓடி வந்து,…எழும்பி படுக்கையிலிருந்து குதித்து, அவளுடைய சிறிய சகோதரியை எழுப்பாமல், அவளால் முடிந்தளவு வேகமாக வீட்டிற்குள்ளே ஓடி வந்தாள். அவள், “அப்பா, அப்பா…”என்று கூறிக்கொண்டேயிருந்தாள். நான் என்னுடைய கால்களில் ஒன்றை நீட்டியிருந்தேன், அப்பொழுது அவள் நன்கு சமமாக அங்கே குறுக்கே என் மடி மீது குதித்தமர்ந்தாள். ஒரு விதமான நவீன சபையைப் போல, உங்களுக்குத் தெரியும், அது நீண்ட காலமாகவே, உங்களுக்குத் தெரியும், பல நூற்றாண்டுகளாகவே விளையாட்டில் இருந்து வருகிறது. அவளால் நன்கு சமநிலையில் தன்னை சரியாக அமர்த்திக் கொள்ள முடிந்தது, மேலும் அவள் தன்னுடைய கரங்களை என் மேல் சுற்றிப் போட்டுக் கொண்டு, “ஓ, என்னுடைய அப்பா, என்னுடைய அப்பாவே…” என்றாள். 50 குட்டி சாராளோ சலசலப்பு சத்தத்தினால் விழித்தெழுந்தாள். உங்களுடைய பிள்ளைகள் அதைச் செய்கிறார்களா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது; என்னுடைய பிள்ளைகள் அதைச் செய்கிறார்கள் இளையவளையோ மூத்தவள் உபயோகித்தவைகளை எடுத்துக்கொள்வாள். சாராள் பெக்கியினுடைய இரவு ஆடையை அணிந்திருந்தபடியால், அவளுடைய ஆடையின் கால் பகுதி அந்த அளவு நீளமாய் இருந்தது, உங்களுக்குத் தெரியுமா? இதோ அவள் சற்று குட்டையான குட்டி நபராய் விழுந்து தடுமாறி வந்தாள். அவள் அங்கு சற்று தாமதமாகவே வந்தாள். எனவே பெக்கி திரும்பிப் பார்த்து, “என் சகோதரி சாராளே, நான் உனக்கு ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன்” என்றாள். மேலும் அவள், “நான் தான் இங்கே முதலில் வந்தேன். எனவே நான் ஏகபோக இடத்தைப் பெற்றுள்ளேன். ஆகையால் நான் தந்தையின் மீது முழுவதுமாக இடம்பிடித்துக் கொண்டேன். எனவே உனக்காக ஒரு இடம் கூட விடப்பட்டிருக்கவில்லையே” என்றாள். 51 அந்தவிதமாகத்தான் சில ஜனங்கள் மார்க்கத்தைக் குறித்து சிந்திக்க முயற்சிக்கின்றனர், அவ்வாறு நினைக்கிறதில்லையா? உ—ஊ. அது உண்மை. 52 பரிதாபமான குட்டி சாராள், அவள் தன்னுடைய சிறிய உதட்டைப் பிதுக்கி, தன்னுடைய சிறிய கருமை நிற கண்களினால் என்னை நோக்கிப் பார்த்துவிட்டு, அவள் அழத் துவங்கிவிட்டாள். பெக்கியோ தன்னுடைய கன்னத்தை என்னுடைய கன்னத்தோடு வைத்து, என்னை அணைத்துப் பிடித்துக் கொண்டாள். நான் அவளை நேசிக்கிறேன். சாராள் அங்கிருந்து நடந்து செல்லத் துவங்கினாள், ஏனென்றால் பெக்கி முழு தந்தையினுடைய இடத்தையும் பிடித்துவிட்டிருந்தாள். அப்பொழுது நான் வேகமாக என்னுடைய மற்றொரு முழங்காலை இந்த விதமாக நீட்டி, இந்தவிதமாக சைகையினால் அழைத்தேன். ஓ, அப்பொழுது அவள் மிகுந்த உற்சாகத்துடன் விரைந்து ஓடிவந்து என்னுடைய முழங்காலின் மேல் குதித்தமர்ந்தாள்…அவளுக்கு சுற்றி அமர மிக நீண்ட இடம் இருக்கவில்லை, அவளுடைய காலகள் தரையைக் கூட தொடவில்லை. அவள் ஒரு விதமாக சற்று சரியாக அமராமல் ஆடிக்கொண்டே அமர்ந்திருந்தாள். (ஒரு வேளை நான் இருப்பது போல, அப்படியே சற்று நடுக்கமான ஒரு நிலையில், உங்களுக்குத் தெரியும்), அவளால்…தரையில் கால்கள் படாமல் அமர முடிந்தது. அவள் ஒரு பெரிய ஸ்தாபனமாயிருக்கவில்லை, உங்களுக்குத் தெரியுமா? ஆகையால் அவளால் உறுதியான தரையின் மேல் கால்களை வைக்க முடியவில்லை. அவளுக்கு சுற்றிலும் போதுமான நீளமுள்ள இடம் இருக்கவில்லை. 53 ஆகையால் அவள் ஒருவிதமாக ஆடிக்கொண்டிருந்தாள், அப்பொழுது நான் இந்தவிதமாக அவளைச் சுற்றி என்னுடைய இரு கரங்களால் பிடித்துக்கொண்டு, அவளை எனக்கு நெருக்கமாக அணைத்துக்கொண்டேன், அப்பொழுது அவளோ அந்த தகதகவென மின்னும் சிறிய கருமை நிறக் கண்களினால் ரெபேக்காவை திரும்பிப் பார்த்தாள். அப்பொழுது அவள், “என் சகோதரி ரெபேக்காளே,” என்று கூப்பிட்டு, “நீ அப்பாவினுடைய இடத்தை முழுவதும் பிடித்துக் கொண்டாய் என்பது உண்மையாயிருக்கலாம், ஆனால் நீ ஒரு காரியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அப்பா என்னை முழுமையாக பிடித்துக் கொண்டாரே” என்று கூறினாள். ஆகையால்… 54 அது…அவ்வண்ணமாகவே அவர் என்னுடைய எல்லாவற்றையும் பிடித்துள்ளார். பெரிய காரியங்களை எடுத்துரைக்க எனக்கு கல்வியறிவு இல்லாமலிருக்கலாம், ஆனால் அவர் என்னை என்னுடைய உறுதியற்ற நிலையில் முழுமையாய் பிடித்துள்ளார் என்பதை மட்டும் நான் அறிந்துள்ளேன், அவருடைய இரு கரங்களும் என்னை சுற்றியே பிடித்திருக்கட்டும், அது என்னை அருமையாக உணரச் செய்யும். 55 நல்லது, நாம் வார்த்தையைத் திறப்பதற்கு முன்பு, நாம் மற்றொரு சிறு ஜெபத்தை அவரண்டை ஏறெடுப்போமாக. 56 இப்பொழுது, பரலோகப் பிதாவே, நாங்களும் கூட பிள்ளைகளைப் போலவே இருக்கிறோம் என்பதை நாங்கள் தெளிவாக உணருகிறோம். நீர் எங்களோடு இருக்க, எங்களோடு ஆராதிக்க விரும்புகிறீர். நாங்கள் உம்மை ஆராதிக்கையில், நீர் எங்களை நேசிக்கிறீர், உம்முடைய கரங்களில் எங்களை பிடித்துக் கொண்டு, உம்முடைய பரிசுத்த ஆவியை கீழே அனுப்பி, நீர் ஜீவித்துக்கொண்டிருக்கிறீர் என்றும், நீர் எங்களுடைய பிதா என்பதை அறிந்து கொள்ளும்படி எங்களுக்குத் தெரியப்படுத்துகிறீர், அதற்காக நாங்கள் உமக்கு மிகுந்த நன்றியை செலுத்துகிறோம். இப்பொழுது, இன்றிரவு பரிசுத்த ஆவியானவர் எங்களண்டை வரட்டும். கர்த்தாவே ஒவ்வொரு இருதயத்தையும் நேசிக்கட்டும். எங்களுக்கு ஒரு புதிய ஆசீர்வாதத்தைத் தாரும். பிதாவே, எங்கள் மேல் இரக்கத்தின் பனித் துளிகளை பொழியும். எங்களுடைய பாவங்களை நோக்கிப்பாராதேயும். அவைகள் மிக அநேகமாயுள்ளன. கர்த்தாவே, அவைகளை மன்னியும். பிதாவே, அவைகளை நீக்கிப்போடும், உம்முடைய கரங்களுக்குள் எங்களை எடுத்துக்கொள்ளும், எங்களுடைய சுகவீனத்தை சுகப்படுத்தும், எங்களுடைய ஆத்துமாக்களை சுத்திகரித்து, கர்த்தாவே, தகப்பனார் எங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து சிறு பிள்ளைகள் வீட்டைச் சுற்றி ஓடுவது போன்றே, நாங்கள் உம்மை ஆராதிக்கும்படியாய் எங்களுடைய ஆவிகளை விடுவியும். கர்த்தாவே, இதை அருளும். 57 இப்பொழுது, எந்த மனிதனுமே வார்த்தையை வியாக்கியானிக்க முடியாது. நாங்கள் அதை தெளிவாக உணருகிறோம். யோவான் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே அந்த புஸ்தகத்தைக் கண்டான், வானத்திலாவது, பூமியலாவது, பூமியின் கீழாவது ஒருவனும் அந்தப் புஸ்தகத்தை திறக்கும்படி எடுக்கவும், அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவானாயிருக்கவில்லை. அப்பொழுது அங்கே உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்டிருந்த ஆட்டுக்குட்டியானவர் ஒருவர் வந்தார். அவர் பாத்திரராயிருந்தார். அவர் புஸ்தகத்தை எடுத்து, அதைத் திறந்து, அதின் முத்திரைகளை உடைத்தார். ஓ ஆட்டுக் குட்டியானவரே இன்றிரவு வாரும். பிதாவே, நாங்கள் உம்பேரில் காத்திருக்கையில், புஸ்தகத்தை எங்களுக்குத் திறந்து தாரும், ஏனென்றால் நாங்கள் இதை தேவாட்டுக் குட்டியாகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 58 நான் இன்றிரவு இங்கே மூன்று வார்த்தைகளைக் கொண்ட ஒரு சிறு வேதவாக்கியத்தையே தெரிந்தெடுத்துள்ளேன். ஆனால் நான் முதலில் பரிசுத்த யோவான் 11-ம் அதிகாரத்தில் 23-ம் வசனம் துவங்கி ஒன்று இல்லை இரண்டு வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவ குமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். 59 ஒரு பாடப்பொருளாக நான் இந்த மூன்று வார்த்தைகளான: இதை விசுவாசிக்கிறாயா? என்பதை உபயோகிக்க விரும்புகிறேன். 60 கொஞ்ச காலத்துக்கு முன்னர் நான் ஒரு கதையை வாசித்தேன். அது ஒரு கற்பனையாயிருந்தது என்றே நான் நினைக்கிறேன். பெரும்பாலும் எல்லா ஊழியக்காரர்களுமே பண்டிதர் இங்கிராம் அவர்களுடைய தாவீது வீட்டின் இளவரசன் என்ற புத்தகத்தை வாசித்திருப்பார்கள் என்று நான் யூகிக்கிறேன். அது ஒரு மகத்தான புத்தகமாயுள்ளது. அது—அது அச்சிடப்படுவது முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது என்று நான் நினைக்கிறே. நான் அதை ஜனங்களிடையே விநியோகிக்கும்படியாக நான் அதை அச்சடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 61 அதில் நான் இந்த லாசருவின் பேரிலும், இயேசுவின் பேரிலும் மற்றும் மரியாள், மார்த்தாள், அதாவது லாசருவின் சகோதரிகளின் பேரிலுமான ஒரு சிறு கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தேன். நான் அதில் இயேசு எங்கே வாழ்ந்தார் என்று வாசித்துக் கொண்டிருந்தேன். அதாவது மார்த்தாளோடும் மரியாளோடும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் இருவருமே அழகான எபிரெய பெண்களாயிருந்தனர். லாசருவோ தேவாலயத்தில் ஒரு வேதபாரகனாயிருக்க, அதாவது ஆசாரியர்களுக்காக நியாயப்பிரமாண நிரூபங்களை உண்டுபண்ண பயின்று கொண்டு இல்லை பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தான். 62 விசேஷமாக இயேசுவானவர் லாசருவோடு மகத்தான ஐக்கியங்கொண்டிருந்தார். அவர் அவர்களுடைய வீட்டிற்கு அங்கே வந்தார் என்பதையும், மார்த்தாளோ அவருடைய வார்த்தைகளுக்கு செவிகொடுப்பதில் கிட்டத்தட்ட சற்று காலங்கடத்திக் கொண்டிருந்தவளாயிருந்தாள் என்றும், ஆனால் அதே சமயத்தில் அவள் போஜனத்தை ஆயத்தம்பண்ணி மேஜையில் வைத்தாள் என்றும், ஆனால் மரியாளோ அவருடைய பாதண்டை அமர்ந்திருந்தாள் என்றும் நாம் அந்த புத்தகத்தில் வாசிக்கிறோம். அப்பொழுது மரியாள் மேலான காரியங்களையே தெரிந்து கொண்டாள் என்று இயேசு கூறினார். 63 அதன் பின்னர், இயேசுவை யோவானண்டை அழைத்து வந்த ஒருவன்தான் லாசரு என்று பண்டிதர் இங்கிராமினுடைய புத்தகத்தின் கதையில், அதாவது தாவீது வீட்டு இளவரசன் என்பதில் நமக்கு கூறப்பட்டது. எப்படியாகிலும், அது உண்மையாயில்லாதிருக்கலாம், எனக்குத் தெரியாது, ஆனால் வெறுமென அதனுடைய பின்னணிக்கானதாயிருக்கலாம், ஆனால் அவர் அவர்களோடு வாழ்ந்திருக்க வேண்டியதாயிருந்தது. 64 இப்பொழுது, நாம் இந்த வருகின்ற, இந்த கடைசி வாரம் கற்றுக்கொண்டு வருவது, சரியாகக் கூறினால், அதாவது இயேசு பரிசுத்த யோவான் 5:19-ல், “…பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வெறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்…” என்றார். புரிகிறதா? “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ.” 65 ஆகையால் இது உண்மையாகவே சரியாக கதையை அமைக்கிறது, பிதா,தேவன், அவருடைய குமாரன், இயேசுவினிடத்தில் பேசி, “உன்னுடைய சிநேகிதன், லாசரு மரிக்கப் போகிறான், ஆனால் அது நன்மையாயிருக்கப் போகிறது, எனவே நீ அந்த வீட்டைவிட்டுப் போ. தூராமாகப் போ, ஏனென்றால் நீ அவனுக்காக ஜெபிக்கும்படி அல்லது அவனை குணப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படும், நீ அதைச் செய்ய நான் விரும்பவில்லை” என்று கூறியிருக்க வேண்டும். நாம் தொடர்ந்து பேசுகையில், நீங்கள் அந்தக் கதையை கவனிப்பீர்களேயானால், அது அதைக் குறித்த மிகுந்த உண்மையை குவிப்பதை நீங்கள் காண்பீர்கள். ஆகையால், இயேசு எந்த எச்சரிப்புமில்லாமல் அல்லது எந்த காரியமுமில்லாமல் அந்த வீட்டிலிருந்து தூர நடந்து சென்று, வேறெங்கோ போய்விட்டார், அந்த இரவும் திரும்பி வரவேயில்லை. அவர் மற்ற சில பட்டிணங்களுக்குச் சென்று விட்டார். இயேசுவானவர் அந்த வீட்டை விட்டு சென்றவுடனே, அப்பொழுதே தொல்லை உண்டானது. 66 இயேசுவானவர் உங்களுடைய வீட்டை விட்டுச் செல்லும்போது, தொல்லையானது அதனுடைய பாதையில் உள்ளது. நினைவிருக்கட்டும், அவர் உங்களுடைய வீட்டை விட்டுச் செல்லும்போது, தொல்லையானது வழியிலேயே உள்ளது. நீங்கள் சமுதாய சங்கங்களைச் சேர்ந்திருந்தாலும், மிகப் பரிபூரணமாக உங்களுடைய சபையில் ஒவ்வொரு காரியமும் செயல்பட்டாலும், ஏதோ மகத்தான பெரிய ரிக்கன் பேக்கரின் பதினாறு நீராவி இயந்திரத்தின் உந்து தண்டு உருளையைப் போல இருந்தாலும், நீங்கள் அதிலிருந்து இயேசுவை விட்டுவிடும்போது, இயேசுவானவர் உங்களுடைய சபையிலிருந்து செல்லும்போது, தொல்லையானது பாதையில் உள்ளது. ஆம் ஐயா, இயேசு ஒரு ஸ்தாபனத்தைவிட்டுச் செல்லும்போது, அதாவது அவர்கள் அவரை ஒருபுறம் தள்ளிவிட்டு, “இப்பொழுது இந்தக் காரியங்கள் அப்படியே சரியாக இருக்கக் கூடும் என்று நாங்கள் விசுவாசிப்பதில்லை” என்று கூறும்போதும், நீங்கள் வேறு ஏதோ ஒன்றை தேர்ந்தெடுக்கும்போதும் தொல்லையானது அதனுடைய பாதையில் உள்ளது. அதை அப்படியே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 67 லூக்காவின் புத்தகத்தில் காணப்படுகிற கர்த்தராகிய இயேசுவின் ஒரு கதை எனக்கு நினைவிற்கு வருகிறது. அவர் ஏறக்குறைய பன்னிரண்டு வயது பையனாயிருந்தபோது, அவருடைய ஜனங்கள் அவரை ஒவ்வொரு வருடமும் வழக்கமாக பெந்தேகோஸ்தே பண்டிகைக்கு அழைத்து செல்வதுபோல அழைத்துச் சென்றதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் எருசலேம் பட்டிணத்தில் அந்தப் பண்டிகையில் இருந்தபோது, நல்ல சந்தோஷமாயிருந்து கொண்டிருந்தபோது, அவர்கள் அவரை விட்டுவிட்டு மூன்று நாட்களாக பிரயாணமாய் சென்று விட்டனர் என்று நாம் வேதத்தில் கண்டறிகிறோம். இயேசு ஒருகால் அவர்களுக்கு அறிமுகமான சிலரிடத்தில் இருக்க வேண்டும் என்ற அவர்கள் எண்ணிக்கொண்டனர், அதை அந்தவிதமாக சாதாரணமாக எடுத்துக்கொண்டனர். இப்பொழுது நாம் அதைச் செய்யக் கூடாது. அவர்கள் அவரைக் கண்டறிய அவர்களுக்கு அறிமுகமானவர்களினூடாகச் சென்றபோது, அவர் அங்கிருக்கவில்லை. 68 நாம் மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன், பெந்தேகோஸ்தே என்ற காரணத்தினாலோ, நம்முடைய பிண்ணணிகள் மற்றும் நம்முடைய முற்பிதாக்கள் மகத்தான விசுவாசிகளாயிருந்தார்கள் என்பதனால் நாம் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இயேசு நம்மோடிருக்கிறார் என்பதை நாம் தவறாக எடுத்துக்கொள்கிறோம். நாம் அவ்வாறு அதைச் செய்யக் கூடாது. நாம் அவரோடு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். ஓ, நான் அதை விரும்புகிறேன். 69 தேவன் இப்பொழுது என்னவாயிருக்கிறார் என்பதே எனக்கு வேண்டும். என் பெற்றோர் எதை உடையவர்களாயிருந்தனர், என்னுடைய முற்பிதாக்கள் எதை உடையவர்களாயிருந்தனர் என்பதெல்லாம் அற்புதமானதுதான். ஆனால் அவர்கள் எதை உடையவர்களாயிருந்தனர் என்பது நல்லதுதான். நாமோ பாதையில் முன்னோக்கியுள்ளோம் என்றே நான் கருதுகிறேன். 70 அவர் இன்றைக்கு என்னவாயிருக்கிறார் என்று நாம் பார்ப்போமாக. நான் பின்னோக்கிப் பார்த்து, திரு.மூடி என்ன செய்தார் என்று பார்க்க விரும்பவில்லை, ஏனென்றால் நாம் திரு.மூடி அவர்களை விட பாதையில் முன்னோக்கி இருக்கிறோம். நம்முடைய சபைகளோடு உள்ள தொல்லையென்னவெனில் நாம் பின்னோக்கிப் பார்த்து, “நல்லது, திரு.ஜான் வெஸ்லி என்ன கூறினார் என்றும், மற்ற சிலர் என்னக் கூறினர் என்றும் நாம் பார்ப்போம்” என்று கூறுகிறோம். அந்தக் காரணத்தினால் தான் மார்க்கம் தன்னுடையதில் உள்ளதைக் காட்டிலும் விஞ்ஞானம் அதனுடைய களத்தில் அதிக முன்னேற்றத்தில் உள்ளது. 71 நீங்கள் மணிக்கு முப்பத்தைந்து மைல்கள் பயங்கரமான வேகத்தில் செல்வீர்களேயானால், அப்பொழுது புவி ஈர்ப்பு விசையானது உங்களை புவியிலிருந்து எடுத்து சென்று விடும் என்று ஒரு பிரெஞ்சு விஞ்ஞானி இங்கே முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு நிரூபித்தார். விஞ்ஞானம் அதை இன்றைக்கு திரும்ப கலந்தாலோசித்துப் பார்க்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவர்கள் மணிக்கு ஆயிரத்து தொள்ளாயிரம் மைல்கள் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள், இன்னமும் சென்று கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து முன்னோக்கி சென்று கொண்டு, முன்னோக்கியே எதிர் நோக்குகின்றனர. ஆனால் நாம் பின்னோக்கிப் பார்த்து மூடி என்னக் கூறினார் என்றும், சாங்கி என்ன கூறினார் என்றும், ஃபின்னி என்னக் கூறினார் என்றும், நாக்ஸ், கால்வின், அவர்களில் சிலர் என்னக் கூறினார் என்றும் பார்க்க விரும்புகிறோம். அவர்கள் கூறினது சரியானதாய் இருந்தது. அது அவர்களுடைய காலத்திற்கானதாயிருந்தது, ஆனால் நாம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். 72 என்னுடைய பாட்டனார் ஒரு மாட்டு வண்டியில் பயணித்தார். நான் போர்டு V8- என்ற காரை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய மகன் ஒரு ஜெட் விமானத்தில் பறப்பான். அந்த விதமாகவே நாம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். அந்த விதமாகத்தான் மார்க்கமும் இருக்க வேண்டும். கர்த்தருடைய வருகையோ சமீபத்திலிருக்கிறது. சபையானது தன்னுடைய வல்லமைக்குள்ளாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். விஞ்ஞானம் மாத்திரம் அந்த அளவு உயர செல்லுமானால், அப்பொழுது அது விழ வேண்டும், ஆனால் நாம் எடுக்கப்படாத மூல ஆதாரங்களை பெற்றுள்ளோம், அதை, அந்த தேவனுடைய வரையறையற்ற வல்லமையை ஒருபோதும் தொட்டதேயில்லை, அதாவது நாம் அந்த வல்லமைக்குள்ளாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். நாம் இன்றிரவு நம்முடைய சிலாக்கியங்களுக்கு, கிறிஸ்தவர்கள் சந்தோஷப்பட வேண்டிய சிலாக்கியங்களுக்கு கீழாக பத்து இலட்சம் மைல்கள் தொலைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் இங்கே நோக்கிப் பார்க்கும்போது, அந்த கல்வி நிலையங்களையும், சுகவீனத்தையும், இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற தொல்லைகளையும் பார்த்து என்னைக் குறித்தே நான் வெட்கமடைகிறேன். நம்முடைய சபையானது வீதியில் நடந்து, வியாதியஸ்தரை சுகப்படுத்தி, மரித்தோரை எழுப்பி, பிசாசுகளைத் துரத்தி, அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து, முழு உலகத்தையுமே இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்று தெளிவாக உணரச் செய்ய வேண்டியதாயுள்ளது. அதைத்தான் நாம் செய்ய வேண்டும். 73 காரணம், நீங்களோ, “திரு.மூடி ஒரு போதும்…” என்று கூறுகிறோம். திரு.மூடி இந்த நாளில் ஜீவித்துக் கொண்டிருக்கவில்லை. அது உண்மை. நாம் கர்த்தருடைய வருகையின் நேரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். அவர் நம்முடைய உறவினரோடு இருந்தார் என்று தவறாக எடுத்துக்கொண்டுள்ளோம். ஆனால் அன்றொரு நாள் ஒரு சவாலிடுபவன் திரு.கிரஹாமை சவாலிட்ட போது, அவர் நம்முடைய உறவினர் மத்தியில் இல்லாதிருந்தார் என்பதை நாம் கண்டறிந்தோம். 74 அவர்கள் அவரை எங்கே கண்டறிகிறார்கள்? அவர்கள் இயேசுவை எங்கே—எங்கே கண்டறிந்தனர்? அவர்கள் அவரை விட்டுச் சென்ற இடத்திலேயே சரியாகக் கண்டறிந்தனர். அவர்கள் அவரை எங்கே விட்டுவிட்டனர்? பெந்தேகோஸ்தேப் பண்டிகையில். நாம் இயேசுவை எங்கே விட்டுவிடுகிறோம்? சபை எங்கே விட்டுவிட்டது? பெந்தேகோஸ்தே பண்டிகையிலே. நாம் அந்த பண்டைய கால பெந்தேகோஸ்தே வல்லமையிலிருந்து பெந்தேகோஸ்தே பண்டிகையிலிருந்து விலகிச் செல்லும்போது, நாம் இயேசுவினிடத்திலிருந்து நடந்து சென்று விடுகிறோம். நண்பனே, அது முற்றிலும் உண்மை. நாம் நம்முடைய சிலாக்கியங்களுக்கு கீழாகவே ஜீவித்துக்கொண்டிருக்கிறோம். ஆம் ஐயா. 75 அவர்கள் அவரை பெந்தேகோஸ்தே பண்டிகையில் விட்டுவிட்டனர். மெத்தோடிஸ்டு பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தேகோஸ்துகள் அவரை எப்போதும் கண்டுபிடிக்கக் கூடிய ஒரே இடம் நீங்கள் அவரை விட்டுவிட்ட இடத்திற்கு திரும்பிச் செல்வதன் மூலமேயாகும். கர்த்தருடைய சந்தோஷம் எங்கே உள்ளது? கர்த்தருடைய வல்லமை எங்கே உள்ளது? சபையோ இன்றைக்கு, “சரித்திரத்தின் தேவனுக்கு என்ன—என்ன நேர்ந்தது?” என்று கேட்கிறது. அவர் தம்முடைய ஜனங்கள் அவரை காட்சியில் அழைக்கும்படிக்கு காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால்… 76 நாம் ஸ்தாபனங்களினூடாக அதைச் செய்ய முடியாது. நாம் உளவியலின் கீழ் அதைச் செய்ய முடியாது. நாம் அதை கணிப்பியலின் கீழே அதைச் செய்ய முடியாது, அல்லது நாம் அதை கல்வியைக் கொண்டு செய்ய முடியாது. நாம் நம்மை பிரித்துக் கொள்கிறோம், நாம் நம்மை பிரித்துக் கொள்கிறோம், நம்மை பிரிக்கிறோம். நாம் பிரிந்திருக்கவில்லை. நாம் உண்மையாகவே கிறிஸ்து இயேசுவில் ஒரே நபராயிருக்கிறோம். நாம் எல்லாரும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருக்கிறோம், நம்முடைய ஸ்தாபனங்கள் அதை ஒருபோதும் செய்யாது. அவைகள் அவ்வளவு நல்லவைகளாயிருந்தாலும், அவைகள் அதைச் செய்யாது. நம்முடைய கல்வியானது சுவிசேஷத்திற்கு எப்போதும் இருந்ததிலேயே மிகப்பெரிய இடையூறாய் உள்ளது, கல்வியே அவ்வாறு உள்ளது. 77 நமக்கு தேவையென்னவெனில் கல்வியல்ல. நமக்குத் தேவை வல்லமையும், வல்லமையாய் கிரியை செய்யும்படி சபையில் மீண்டும் பரிசுத்த ஆவியின் கிரியையுமேயாகும். இயேசு ஒருபோதும், “உலகமெங்கும் போய் போதியுங்கள்” என்று கூறவேயில்லை. அவர் ஒருபோதும், “உலகமெங்கும் போய்…” என்று கூறவேயில்லை. அவர், “உலகமெங்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்றார். சுவிசேஷம் பரிசுத்த ஆவியின் வல்லமையை, உயிர்த்தெழுதலைக் கிரியையில் காட்டுவதாகும். நாம் இருக்க வேண்டிய இடத்திற்கு பதிலாக இன்னும் பத்து இலட்சம் மைல்கள் தூரமான அளவு குறைவுள்ளவர்களாய் இருக்கிறோம். நாம் முன்னோக்கிச் செல்வோமாக. நாம் அவரை விட்டுவிட்ட பெந்தேகோஸ்தே பண்டிகைக்குத் திரும்பிச் செல்வோமாக. 78 இயேசு யோவானில் கூறினார், அது 15-வது அதிகாரம் என்று நான் நினைக்கிறேன், அவர், “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்” என்றார். இப்பொழுது அந்த திராட்சச் செடியானது முதல் கொடியை தோன்றப் பண்ணினபோது, அந்தக் கொடியிலிருந்து ஒரு அப்போஸ்தலருடைய நடபடிகளின் புஸ்தகம் எழுதப்பட்டதானால், அது இரண்டாம் கொடியை தோன்றப் பண்ணும்போது மற்றொரு அப்போஸ்தலருடைய நடபடிகளின் புஸ்தகத்தை உருவாக்கும். மூன்றாம் கொடியும் மற்றொரு அப்போஸ்தலருடைய நடபடிகளின் புஸ்தகத்தை உருவாக்கும். அந்தத் திராட்சச் செடியிலிருந்து தோன்றுகிற ஒவ்வொரு கொடியும் முதல் கொடியானது இருந்ததுபோல அதேவிதமாக இருக்கும். 79 இப்பொழுது, உங்களால் ஒட்டுப்போட முடியும், நாம் அதை அறிவோம். நான் ஒரு ஆரஞ்சு பழ மரத்தின் மேல் கிட்டத்தட்ட எட்டு வித்தியாசமான கனிகள் இருப்பதைக் கண்டிருக்கிறேன். நான் ஒரு ஆரஞ்சு பழ மரமானது திராட்சப் பழங்களையும், எலுமிச்சைப் பழங்களையும், மற்ற வேறு பழங்களையும் தருவதைக் கண்டிருக்கிறேன், ஆனால் அவைகள் அம்மரத்தில் உருவாக்கப்பட்டிருந்தன. 80 அதுதான் இன்றைக்கு காரியமாயுள்ளது. நாம் நம்முடைய எண்ணங்களில் உருவாக்கப்பட்டிருக்கிறோம், நம்முடைய ஸ்தாபனங்களில் உருவாக்கப்பட்டிருக்கிறோம், ஆனால் அந்த மரமானது மற்றொரு திராட்சைப் பழ செடியினைத் தோன்றப்பண்ணுமானால், அப்பொழுது அது அதற்குள்ளாகச் சென்ற மூல ஒன்றைப் போலவே இருக்கும். அல்லேலூயா! ஓ, சபையானது ஒன்றாக இணையும், ஆனால் நமக்கு அசலான வல்லமையேத் தேவை. நமக்கு பரிசுத்த ஆவி, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையேத் தேவை. அதைத்தான் செய்யும்படி அவர் நம்மிடம் கூறினார். 81 “நானே திராட்சை செடி, நீங்கள் கொடிகள்.” ஒரு திராட்சைச் செடி ஒரு கொடியை தோன்றப்பண்ணினால், அதிலிருந்து அழகான நீலநிற திராட்சைப் பழங்கள் தோன்றும், அடுத்தக் கொடியிலும் அது அழகான நீலநிற திராட்சைப் பழங்களையே தோன்றப் பண்ணும். முதல் திராட்சை செடி தோன்றினபோது, அவர்கள் பரிசுத்த ஆவியின் விளைவின் கீழிருந்து, மகத்தான அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்து, உலகத்திற்கு…தங்களுடைய சாட்சியை முத்தரித்தனர். அவர்கள் அநேகரும் கூட தங்களுடைய சொந்த சாட்சியோடு, அவர்கள் தங்களுடைய இரத்தத்தோடு தங்களுடைய சாட்சியை முத்தரித்தனர். அவர்கள் சுவிசேஷத்தைக் கொண்டுவர எல்லாவிதமான அபாயங்களினூடாக மற்றும் ஒவ்வொரு காரியத்தினூடாகவும் சென்றனர். அவர்கள் பாடுபட்டனர்; அவர்கள் அடிக்கப்பட்டனர்; அவர்கள் தண்டிக்கப்பட்டனர். “மற்றவர்கள் பரிசை வெல்ல இரத்த சமுத்திரத்தினூடாக பயணத்திருக்கையில், நாம் ஒரு எளிதான மலர்களைக் கொண்ட படுக்கையில் பரலோக வீட்டிற்கு கொண்டு செல்லப்பட வேண்டுமா?” நாம் என்ன செய்யும்படி எதிர்பார்க்கிறோம்? “நான் ஆளுகை செய்ய வேண்டுமானால் நான் போரிட வேண்டும். கர்த்தாவே, என்னுடைய தைரியத்தை வர்த்திக்கச் செய்யும்.” நிச்சயமாக. நமக்கு தேவை ஒரு… 82 நமக்கு ஒரு புதிய ஸ்தாபனம் தேவையில்லை. நமக்கு ஒரு புதிய சபைக் கட்டிடம் தேவையில்லை. நமக்கு இன்றைக்கு தேவையென்னவென்றால் பண்டைய கால காட்டகமான, எல்லா பாவத்தைக் கொல்லுகிற பெந்தேகோஸ்தேவில் பிறந்த பெந்தேகோஸ்தே எழுப்புதலேயாகும், அதுவே இயேசுவை காட்சியில் கொண்டு வரும்படியான பரிசுத்த ஆவியின் வல்லமையை மீண்டும், மீண்டும் சபைக்குள்ளாக திரும்பக் கொண்டுவருகிறதாயிருக்கிறது. 83 சரித்திரத்தின் தேவன் எப்பொழுதுமே ஒரு முக்கியமான நேரத்தில் காட்சியில் எழும்புகிறார். நமக்கு அதுவே தேவை. அதுவே இன்றைக்கு நம்முடைய சபையோடுள்ள காரியமாய் உள்ளது. நாம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம். நாம் உலகத்தின் நாகரீகங்களுக்குள்ளாக விழுந்து கொண்டிருக்கிறோம். படிப்படியாக ஒவ்வொரு வருடமும் அது கொஞ்சம் கொஞ்சமாக மரிக்கத் துவங்கி உலர்ந்து போகிறது. 84 அதை கத்தரித்துப் போடும் நேரம் சமீபித்துவிட்டது. நான் இந்த பிரசங்க பீடத்தில் நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக தேவன் அதைத் திரும்பவும் துண்டித்துப் போடுவார். தேவன் அவனைத் திரும்பவும் துண்டித்துப் போட்டு அவள் கனிதரும்படி செய்வார். இந்நாட்களில் ஒன்றில் அதிலிருந்து உலகத்தின் கிரியைகளை அவர் துண்டித்துப் போடுவார். அப்பேர்ப்பட்ட ஒரு அவமானம், சபையானது மதத்தின் பெயரால் அந்த விதமாக தொடர்ந்து செய்து வருகிறது. 85 இயேசு புறப்பட்டுச் சென்றபோது, மரணம் உள்ளே வந்ததை நாம் கண்டறிகிறோம். இயேசுவானவர் நம்முடைய சபையை விட்டுச் செல்லும்போது, பரிசுத்த ஆவியின் வல்லமை நம்முடைய சபையைவிட்டுச் செல்லும்போது, அது படிப்படியாக அழியத் துவங்கி மரிக்கிறது. பின்னர் கொஞ்சங் கழித்து அது ஒன்றுமில்லாததாகிறது. இப்பொழுது, இயேசு புறப்பட்டுச் சென்றபோது, மரணம் உள்ளே நுழைந்தது. ஓ, அது என்னே ஒரு சோகமான நேரமாயிருந்தது. 86 கவனியுங்கள், அவர்கள் எதிர்பார்த்திருந்தன, அவர்கள் இயேசுவுக்காக அனுப்பினர், ஆனால் அவரோ வரவில்லை. அவர்கள் அவருக்காக மீண்டும் அனுப்பினர், அவர் வரவில்லை, ஆனால் அவர் என்ன செய்யப் போவதாயிருந்தார் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் இன்றிரவு அறிந்திருக்கிறார். அது அவரிடத்திலிருந்து தவறிப் போய்விடவில்லை; அவர் சரியாக என்ன செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கிறார். அது அவரிடத்திலிருந்து தவறிப் போய்விடவில்லை; அவர் சரியாக என்ன செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கிறார். நான் இந்த பிரசங்க பீடத்தில் நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அவர் ஒரு கூட்ட ஜனத்தை எழுப்பப் போகிறார். அவர் புறஜாதி தலைமுறையிலிருந்து தம்முடைய நாமத்தின் நிமித்தமாக ஒரு கூட்ட ஜனத்தை எழுப்புவார். அவர் அதைச் செய்வார். 87 இது சரியாக இப்பொழுது யூதருடைய நேரம் சமீபித்திருப்பதாயுள்ளது, புறஜாதியாரின் நேரம் முடிந்து கொண்டிருக்கிறது, ஏனென்றால் அவர்கள் வெளியேப் போய்விட்டனர். அவர்கள் கிறிஸ்துவை புறக்கணித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய அடையாளங்களை புறக்கணித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் தேவ பக்தி என்று அழைக்கப்படுகின்ற ஒவ்வொரு காரியத்தையும் புறக்கணித்து கொண்டிருக்கிறார்கள், மேலும் அதை ஏதோ ஒருவிதமான மனோத்தத்துவம் அல்லது பிசாசின் வல்லமை…என்று பெயரிட்டு அழைக்கின்றனர். அவர்கள் பரிசுத்த ஆவியைத் தூஷித்துக்கொண்டும், தேவனிடத்திலிருந்து தங்களை தூரமாய் விலக்கி முத்திரையிட்டுக் கொண்டிருக்கின்றனர். தேவன் கொஞ்சங் கழித்து அந்த சிறுபான்மையினரை எடுத்து, ஒரு வல்லமையுள்ள சபையாக அதை எழுப்புவார், அதன்பின்னர் பரிசுத்த ஆவியை யூதர்களண்டைத் திருப்பி, புறஜாதி சபையையோ பரலோக வீட்டிற்கு எடுத்துக் கொள்வார். முற்றிலும் சரியே. அவள் இப்பொழுது ஆயத்தத்தில் இருக்கிறாள். ஓ, எப்படியாய் கிட்டத்தட்ட நாம் முடிவின் நேரத்தில் இருக்கிறோம். 88 இயேசு, அவர் அறிந்திருந்தார். கொஞ்சங்கழித்து அவர், “நம்முடைய நண்பன், லாசரு நித்திரையாயிருக்கிறான்” என்றார். 89 காரணம், அவர் ஒரு சிறு இளைப்பாறுதலைக் குறித்தேப் பேசிக்கொண்டிருந்தார் என்று சீஷர்கள் எண்ணிக் கொண்டனர். அவர், “நல்லது, அவன் நித்திரை செய்து கொண்டிருந்தால், அவன் மிக நன்றாகத்தான் இருந்து கொண்டிருக்கிறான்” என்றார். 90 அவர்…அவர்கள் புரிந்து கொள்ளும்படியான அவர்களுடைய வார்த்தைகளிலேயே…கூறினார், அதாவது, “அவன் மரித்துப் போய்விட்டான், உங்கள் நிமித்தமாக நான் அங்கு இல்லாததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார். புரிகிறதா? “உங்கள் நிமித்தமாக நான் அங்கு இல்லாததற்காக மகிழ்ச்சியடைகிறேன்.” காரணம் அவனைக் குணப்படுத்தும்படி—குணப்படுத்தும்படி அவர்கள் அவரிடத்தில் வேண்டிக் கொண்டிருந்திருப்பார்கள், ஆனால் அவரால் அதைச் செய்ய முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார், ஏனென்றால் இன்னும் தரிசனமோ…அந்த நான்கு நாட்கள் கழித்தாய் அந்த நேரம் இருந்தது என்பதை பிதாவானவர் அவரிடத்தில் கூறியிருந்தார் என்பதை அவர் அறிந்திருந்தார். எவ்வளவு அழகாயுள்ளது; அவர் கல்லறையிலே, “பிதாவே, நீர் எப்பொழுதும் எனக்கு செவி கொடுக்கிறீர் என்பதற்கு நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன், ஆனாலும் சூழ்ந்து நிற்கும் ஜனங்கள் நிமித்தம் இதைச் சொன்னேன்” என்றார். புரிகிறதா? அவர் என்ன செய்யப் போவதாயிருந்தார் என்பதை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார். அவர், “நான் போய் அவனை எழுப்புவேன்” என்றார். 91 இப்பொழுது, அந்த சிறிய வீடு உண்மையாகவே மனமுடைந்து நிலைகுலைந்து போயிருந்தது, சம்பாதித்தவரோ போய்விட்டிருந்தார், சோகம்…ஓ, நீங்கள் வீட்டில் சோகமடைந்திருக்கும்போது, அல்லது ஒரு சோகமான இருதயத்தோடிருக்கும்போது, அது அற்புதமாயுள்ளது, அப்பொழுது இயேசு திடீரென்று தோன்றுகிறார். அப்படித்தானே? என்னால் மார்த்தாளை, அதாவது ஒரு அழகான சிறிய ஸ்திரீ தன்னுடைய முகத்தின் மேல் ஒரு கறுப்புத் திரையிட்டிருப்பதையும், மற்றும் மரியாள், அவர்கள் ஒருவரையொருவர் பற்றிப் பிடித்துக் கொண்டு, “நாம் என்ன செய்வோம்? அப்பாவும், அம்மாவும் போய்விட்டார்கள், நம்முடைய விலையேறப் பெற்ற சகோதரனும்…இப்பொழுது நாம் சபையை விட்டுவிட்டோம், அவர்களிடத்திலிருந்து நாம் தள்ளிவைக்கப்பட்டு, நசரேயனாகிய இயேசுவைப் பின்பற்றும்படி வெளியே வந்து விட்டோமே. அவரோ நம்மை விட்டு எங்கோ தூரமாய் போய்விட்டாரே” என்று கூறுவதையும் என்னால் யூகித்துப் பார்க்க முடிகிறது. 92 அப்பொழுது விமர்சகன் ஒருவன் அருகில் வந்து, “ஹே, அந்த தெய்வீக சுகமளிப்பவர், அந்த கலிலேய தீர்க்கதரிசி எங்கே? அவர் இப்பொழுது எங்கே? பாருங்கள், உண்மையாகவே அவர் ஏதோ ஒரு காரியத்தை செய்யும்படியான நேரம் வருகிறபோது, அவர் போய்விட்டிருக்கிறாரே” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அங்குதான் அந்தக் காரியம் உள்ளது. பாருங்கள், தேவன் அதைச் செய்ய விரும்புகிறார், ஜனங்களோ, ஜனங்கள், அவர்கள் என்னவாயிருக்கிறார்கள் என்று காண்பிக்கட்டும், ஆம், உண்மையாகவே அவர்கள் என்னவாயிருக்கிறார்கள் என்று பார்க்கும்படி அவர்களை சோதிக்கிறார். அவர் ஒரு ஆசீர்வாதத்தை அவர்களுக்கு அளிக்கிறார். அவர் பிரசன்னமாகி, தம்மைக் காண்பித்து, தம்மை ஜனங்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் என்னவிதமான ஒரு எதிர்விளைவாக அதை எடுத்துக்கொள்வார்கள் என்றும், அதைக் குறித்து அவர்கள் என்ன செய்வார்கள் என்றும் பார்க்க விரும்புகிறார். 93 இப்பொழுது, பரிதாபமான லாசரு மரித்து ஒரு சில நாட்கள், நான்கு நாட்கள் கழித்து நாம் கண்டறிகிறோம். அவர்கள் அவனை அடக்கம்பண்ணிவிட்டனர். இரண்டாம் நாள், மூன்றாம் நாள், நான்காம் நாள்…இப்பொழுது, மூன்று நாட்களுக்குப் பிறகு அழிவு உண்டாகிறது என்பதை எவருமே அறிவர். முதலில் முகத்தில் உள்ள மூக்கானது உள்ளே விழுந்துபோகிறது. அதன்பின்னர் அழிவு உண்டாகிறது; தோல் புழுக்கள் சரீரத்தை தின்னத் துவங்குகின்றன. அவர்கள் அவனைத் தரையில் வைத்திருந்தனர், அவர்கள் அவனை வைத்திருந்த குகையின் மேல் ஒரு பெரிய கல்லை வைத்து மூடியிருந்தனர். எப்பொழுதாவது ஒரு முறை அந்த வாலிப பெண் பிள்ளைகள் புறப்பட்டு போய் அந்த கல்லறையண்டை முழங்காற்படியிட்டு அழுவார்கள். 94 கொஞ்சங் கழித்து, “இயேசு வந்திருக்கிறார். அவர் பட்டிணத்திற்கு சென்றதை நாங்கள் கண்டோம்” என்ற செய்தி சுற்றிலும் பரவினது. ஓ, அந்த மார்த்தாள், அவள் வார்த்தைக்கு செவி கொடுப்பதைக் குறித்தக் காரியத்தில் தாமதப்பட்டவளாயிருந்தது போன்று தென்பட்ட போதிலும், அவளுக்கு உள்ளே என்ன இருந்தது என்பதை நிரூபித்துவிட்டாள். இதோ அவள் வருகிறாள். அப்பொழுது அவள் தன்னுடைய பாதையில் வந்து கொண்டிருந்தபோது, அவரைத் தேடிக் கொண்டே ஓடினாள். அப்பொழுது வீதியின் பக்கத்தில் இருந்த சிலர், “உன்னுடைய மார்க்கம் தவறானது என்பதில் இப்பொழுது திருப்தியடைந்துவிட்டாய்,” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. ஆனால் அவளோ அவர்களை புறக்கணித்து விட்டு தொடர்ந்து போனாள், அதாவது எல்லா விமர்சகர்களையும் கடந்து சென்றாள். அவள் அவரைக் காணும் வரை சென்று கொண்டேயிருந்தாள், ஒருகால் அவர் வீதியின் மூலையில் அமர்ந்து கொண்டிருந்திருக்கலாம். 95 இப்பொழுது, அது வெளித்தோற்றத்தில், அவள்…அவள் அவரைக் கடிந்து கொள்ள ஒரு உரிமை இருந்திருக்கலாம், அவரிடத்தில் கொடுமையாய்ப் பேசியிருக்கலாம். ஏன், அவள் ஓடிப் போய், “நீர் இங்கே பாரும், இங்கே பாரும். நீர் ஒரு தீர்க்கதரிசியாய், ஒரு தேவனுடைய மனிதனாயிருக்க வேண்டியவர். நாங்கள் உம்மை அழைத்த போது நீர் ஏன் வரவில்லை? ஏன்? நாங்கள் இப்பொழுது பட்டிணத்தில் பழிப்புப் பொருளாயிருக்கிறோமே. நாங்கள் எங்களுடைய சபையைவிட்டு உம்மைப் பின் தொடர வந்தோமே” என்று கேட்கவில்லை. அவ்வாறு கேட்க அவளுக்கு ஒரு உரிமை இருந்தது போன்று தென்பட்டது. ஆனால் உங்களுக்குத் தெரியுமா, ஆட்டுக் குட்டியும் புறாவும் என்று நான் பிரசங்கித்தது போலவே, நாம் ஒரு ஆட்டுக் குட்டியாயிருந்தால், ஒரு ஆட்டுக்குட்டி தான் பெற்றுள்ள ஒவ்வொரு உரிமையையும் விட்டுக் கொடுத்து விடுகிறது. அது முற்றிலும் உண்மையே. அது உரோமத்தைத் தவிர வேறொன்றையும் உடையதாயிருக்கவில்லை. எனவே அது அதை விட்டுக் கொடுக்க வேண்டியதாயுள்ளது. நீங்கள் தேவனை சேவிக்க நீங்கள் பெற்றுள்ள ஒவ்வொரு உரிமையையும் விட்டுக் கொடுத்துவிட வேண்டும். அது முற்றிலும் உண்மையே. 96 இந்த அறைகுறையான அசிங்கமான ஸ்திரீகளைக் குறித்து நான் கடிந்து கொண்ட விதத்தை நீங்கள் அறிவீர்கள். அவர்கள், “நாங்கள்—நாங்கள் அமெரிக்கர்கள் நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோமோ அதை நாங்கள் செய்ய் முடியும்” என்றனர். 97 அப்பொழுது நான், “அது முற்றிலும் உண்மை, ஆனால் நீங்கள் ஒரு ஆட்டுக் குட்டியாக இருந்தால், நீங்கள் உங்களுடைய உரிமைகளை விட்டுக் கொடுத்துவிடுவீர்கள்” என்றேன். சிகரெட்டுகளை புகைத்தல், அது போன்றவைகளை தொடர்ந்து செய்தல், அது ஸ்திரீயானவள் செய்கிறதிலேயே மிகவும் மோசமான காரியமாய் உள்ளது. அது முற்றிலும் உண்மையே. 98 அண்மையில் ஒரு பெண்மணி என்னிடத்தில் கூறினாள், அதாவது என்னிடத்தில் பேசிக் கொண்டிருந்தாள், அப்பொழுது அவள், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, அவர்கள் அந்த விதமான ஆடைகளைத் தவிர வேறு ஆடைகளை தயாரிக்கிறதில்லை” என்று கூறினாள். 99 அதற்கு நான், “ஆனால் அவர்கள் இன்னும் தையல் இயந்திரங்களைத் தயாரித்து, துணிகளையும் விற்கிறார்களே. எனவே அதற்கு எந்த சாக்கு போக்குமேக் கிடையாது” என்றேன். அது முற்றிலும் உண்மை. 100 நினைவிருக்கட்டும், நீ உன்னுடைய கணவனுக்கு இங்கே சுத்தமானவளாக இருக்கலாம், ஆனால் என்றோ ஒரு நாள், அதற்கான விபச்சாரத்திற்காக நீ நிச்சயமாகவே பதில் கூறுவாய்: “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று.” 101 இன்றைக்கு பெந்தேகோஸ்தே ஸ்திரீகளோடுள்ள காரியம் என்னவென்றே நான் வியப்புற்றுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்படியாய் பண்டைய சரியான சாலையிலிருந்து தூர கடந்து சென்றுவிட்டீர்கள். முன்பெல்லாம் எப்படியாய் உங்களுடைய தாய்மார்கள் நீண்ட கூந்தலை உடையவர்களாயிருந்தனர், பெந்தேகோஸ்தே ஸ்திரீகளே இன்றைக்கு நீங்கள் லெந்து நாட்களுக்கு முன்னர் களியாட்டம் போடும்படி நடத்தும் மார்டி கிராஸ் என்ற கூட்டத்தினரைப் போன்று வண்ணந்தீட்டிக் கொண்டு, உங்களுடைய தலைமுடியைக் கத்தரித்துக்கொண்டு, சிறிய குட்டையான ஆடைகளை அணிந்து கொண்டிருக்கிறீர்கள். அந்தவிதமாகவே மற்றவற்றையும் செய்கிறீர்கள்…அதாவது வெளியே போய், ஆண்கள் வந்து கொண்டிருக்கும்போது, பிற்பகலில் முற்றத்தில் புல்வெட்டுகிறீர்கள், அந்த மனிதர்களோடு விபச்சாரம் செய்ததற்காக நீங்கள் பதில் கூற வேண்டியவர்களாயிருக்கப் போகிறீர்கள் என்பதை ஸ்திரீகளாகிய நீங்கள் தெளிவாக உணருகிறீர்களா? நீங்கள் அந்த நோக்கத்திற்காக உங்களை அவர்களிடத்தில் அந்தவிதமாகக் காண்பிக்கிறீர்கள். அது சபையின் மேலும், ஜனங்களின் மேலும் உள்ள ஒரு பொல்லாத ஆவியாகும், அவர்கள் அதை அறியாதிருக்கிறார்கள். அதை அறியாமல் குருடாயிருக்கிறார்கள். அது உண்மையே. 102 நான் ஒரு சுவிசேஷகனாயிருக்கிற காரணத்தால் அதைக் கூற எனக்கு உரிமையில்லை என்று நீங்கள் ஒருகால் கூறலாம். பரவாயில்லை, நான்—நான் பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலைப் பின்பற்ற வேண்டும்; அவ்வளவுதான் என்னால் கூற முடியும். நீங்கள்…நான் உங்களை நியாயத்தீர்ப்பிலே சந்திப்பேனேயானால், அப்பொழுது நான் என்னுடைய கரங்களில் உங்களுடைய இரத்தப் பழியை உடையவனாயிருக்க மாட்டேன். சாத்தானைப் போலக் காணப்படுகிற ஒவ்வொரு சிறு காரியத்தையும் விட்டு விலகிப் போங்கள். அதிலிருந்து விலகியிருங்கள். அதிலிருந்து விலகுங்கள். எத்தனை தொலைகாட்சி நட்சத்திரங்கள்…இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, நீங்கள் இங்கு ஒரு தொலைக்காட்சி நட்சத்திரமாக இருக்கவில்லை; நீங்கள் ஒரு தேவனுடைய குமாரத்தியாயிருக்கிறீர்கள். 103 நீண்ட காலத்திற்கு முன்னர் அவர்கள் அடிமைகளை விற்றுக்கொண்டிருந்த நேரத்தில் இருந்த ஒரு பண்டைய அடிமையைக் குறித்து அன்றொரு காலை ஒரு போதகருடைய சபையில் பிரசங்கித்தேன். அவர்கள் வழக்கமாக முன்பெல்லாம் வந்து அவர்களை ஏலத்தின் பேரில் வாங்குவார்கள். அப்பொழுது அந்த ஜனங்கள் தங்களுடைய தாய் நாட்டினிமித்தமாக அழுது கொண்டும், கதறிக்கொண்டுமிருப்பார்கள்; ஏனென்றால் அவர்கள் அதற்குப் பின் ஒருபோதும் திரும்பிச் செல்லமாட்டார்கள். அவர்கள் அடிமைகளை சாட்டையில் அடிக்க வேண்டியதாயிருந்தது. நீங்கள் ஒரு மோட்டார் வாகனத்தை, வேறெதையாவது கிரயத்திற்கு வாங்குவதுபோல அவர்கள் அடிமைகளை வாங்குவார்கள், அவர்கள் மானிட வர்க்கங்களையே அடிமைகளாக விற்றுக்கொண்டிருந்தனர். 104 ஒரு நாள் அடிமைகளை வாங்குபவர் ஒருவர், ஒரு தரகர் வந்தார், சரியாகக் கூறினால்…ஒரு பெரிய…அடிமைகளை விற்கும் அந்த பெரிய தோட்டத்திற்குள்ளாக வந்தார். அப்பொழுது அடிமைகளை வாங்குபவர், “எத்தனை அடிமைகளை நீங்கள் விற்பனைக்காக வைத்துள்ளீர்கள்?” என்று கேட்டார். 105 மேலும் அவர், “பரவாயில்லை, நான் சிலரை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று கூறினார். அவர்கள் மிகப்பெரிய உருவங்கொண்டவர்களை பெற்றெடுக்கவே முயற்சிப்பர். அவர்கள் தாய்மார்களையும், தகப்பன்மார்களையும் எடுத்து…ஸ்திரீயானவள், அதாவது ஒரு திடாகாத்திரமான ஒருவன் சிறு உருவங்கொண்ட பெலவீனமான ஸ்திரீயை விவாகம்பண்ணியிருந்தால், அப்பொழுது அவர்கள் இந்த பெரிய உருவங்கொண்ட ஆரோக்கியமான புருஷர்களை கொண்டு சென்று…குதிரைகளையும் மிருகங்களையும் இனப்பெருக்கம் செய்வது போன்று செய்வர். அது ஒருபோதும் சரியானதாயிருக்கவில்லை. தேவன் மனிதனை உண்டாக்கினார். மனிதன் அடிமைகளை உண்டாக்கினான். அது ஆரம்பத்திலிருந்தே சரியானதல்ல, ஒருபோதும் சரியானதல்ல. எந்த மனிதனும் ஒரு அடிமையாயிருக்க வேண்டும் என்று தேவன் எண்ணுகிறதேயில்லை. இல்லை ஐயா. இல்லை…என்ன சம்பவித்தது என்று கவனியுங்கள். 106 அப்பொழுது இந்த நபர் அந்த அடிமைகள் எல்லாருக்கு மத்தியிலும், “நான் அவர்களில் சிலரை வாங்க விரும்புகிறேன்…” என்று கூறினான். அவன் அங்கிருந்த ஒரு வாலிப நபரைக் கவனித்தான். அவர்கள் அவனை சவுக்கினால் அடிக்க வேண்டியதாயிருக்கவில்லை. அவன் தன்னுடைய முகவாய் கட்டைகளையும் தலையையும் மேல் நோக்கிப் பார்த்தவாறு வைத்துக்கொண்டு ஒரு உண்மையான நற்பண்பு கொண்டவனைப் போல சுற்றி நடந்து கொண்டிருந்தான். அப்பொழுது அந்த தரகர், “நான் அவனை கிரயத்திற்கு வாங்க விரும்புகிறேன்” என்றார். 107 அப்பொழுது முதலாளியோ, “ஆனால் அவன் விற்பனைக்கு அல்ல” என்றார். 108 அதற்கு தரகர், “ஏன்?” என்று கேட்டுவிட்டு, “அவன் எஜமானா?” என்றும் கேட்டார், 109 அப்பொழுது முதலாளியோ, “இல்லை, அவன் ஒரு அடிமை” என்றார். 110 அதற்கு தரகரோ, “பரவாயில்லை. ஏன்? நீங்கள் மற்றவர்களை போஷிப்பதைக் காட்டிலும் அவனை மேலாக போஷிக்கிறீர்களா?” என்று கேட்டார். 111 அப்பொழுது முதலாளியோ, “இல்லையே. அவனும் மற்ற அடிமைகள் சாப்பிடும் அங்குள்ள அடிமைகளின் சமயலறையில்தான் சாப்பிடுகிறான். அவன் ஒரு அடிமையாயிருக்கிறான்” என்றார். 112 அதற்கு தரகர், “மற்றவர்களைக் காட்டிலும் அவனை அவ்வளவு வித்தியாசமாக்குகிறது எது?” என்று கேட்டார். 113 அப்பொழுது முதலாளியோ, “நானே அதைக் குறித்து நீண்டகாலமாக வியப்புற்று வந்தேன், ஆனால் ஒரு நாள் நான் அதை கண்டறிந்து கொண்டேன். அப்பாலுள்ள அவனுடைய தாய்நாட்டில் அவனுடைய தந்தை அவர்கள் குலமரபினருக்கு இராஜாவாக இருக்கிறாராம். எனவே அவன் வீட்டிலிருந்து தூரமாய் இங்கு வந்து ஒரு அந்நியனாயுள்ள போதும், அவன் இன்னமும் தன்னை ஒரு ராஜ குமாரன் என்று எண்ணிக்கொண்டு அந்தவிதமான ஒருவனைப்போலவே தன்னை நடத்திக் கொள்கிறான்” என்று கூறினார். அதாவது…ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்காரனுக்கு அவனுடைய தந்தை ஒரு இராஜா என்று தெளிவாக உணர முடிந்ததானால், இங்கே ஒரு அந்திய தேசத்தில் கடல் கடந்து வந்துள்ளபோதும், இன்னமும் அவன் ஒரு ராஜாவினுடைய குமாரன் என்று அறிந்துகொள்ள முடிகிறதென்றால், நீங்கள் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கும்போது, ஸ்திரீகளும், புருஷரும் தங்களை எப்படி நடத்திக்கொள்ள வேண்டும்? அதைப் போன்றே நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாகவே. அந்தவிதமாகவே உங்களை நடத்திக் கொள்ளுங்கள். உங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள், தேவனுடைய குமாரரும், குமாரத்திகளும் போல நடந்து கொள்ளுங்கள். என்ன ஒரு நிலைமையாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. 114 இங்குதான் நாம் இருக்கிறோம். ஓ, மார்த்தாள் வெளியே ஓடி வருகிறாள். அவள் அவருக்கு எதிராக ஏதோ ஒரு காரியத்தைக் கூற வேண்டிய ஒரு விதத்தை உடையவளாயிருந்ததைப் போன்றேக் காணப்பட்டாள். “நீர் ஏன் என்னுடைய சகோதரனிடத்திற்கு வரவில்லை? நாங்கள் உங்களுக்காக என்ன செய்துள்ளோம் என்று பாரும், ஆனால் நீரோ எங்களை கைவிட்டுவிட்டீரே.” அவள் அதைக் கூறியிருந்திருந்தால், அப்பொழுது அந்த சம்பவம் ஒரு போதும் அது நடந்தவிதமாக முடிந்திருந்திருக்காது. இல்லை, ஐயா. நீங்கள் தேவனுடைய ஒரு தெய்வீக வரத்தை அணுக வழி உள்ளது. தேவன் ஒரு வரத்தை அனுப்பினால், அப்பொழுது நீங்கள் அதை சரியாக அணுக வேண்டும். நீங்கள் அதிலிருந்து எந்தக்காரியத்தையாவது எப்போதாவது பெற்றுக்கொள்ள எதிர்பார்த்தால், நீங்கள் அதை சரியாக அணுக வேண்டும். மார்த்தாள் அதை அறிந்திருந்தாள். அவள் அநேகமாக சூனேமிய ஸ்திரீயையும், அவளுடைய குழந்தையைக் குறித்தும் வாசித்திருப்பாள். அவள்…அந்த சூனேமிய ஸ்திரீ எலியாவுக்குள் தேவன் இருந்ததை அறிந்திருக்கும்போது, அவர் இயேசுவுக்குள் எவ்வளவு அதிகமாய் இருந்திருப்பார்? நிச்சயமாக. 115 ஆகையால் அவள் சரியான அணுகுமுறையோடு சென்றாள். அவள் ஓடிப்போய், அவருடைய பாதத்தில் வீழ்ந்தாள். நான் அதை விரும்புகிறேன்! அவருடைய பாதத்தில் விழுந்து, “ஆண்டவரே…” என்றாள். அதுவே அவருடைய சரியானப் பெயர். அந்தவிதமாக அவர் இருந்தார். அவர் அவளுடைய ஆண்டவராய் இருந்தார். “ஆண்டவரே, நீர் இங்கேயிருந்திருப்பீரேயானால், என் சகோதரன் மரித்திருந்திருக்கமாட்டான்.” 116 ஓ, என்னே. ஓ, அவர் அந்த அழகான ஸ்திரீயையும், அவளுடைய கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரையும் நோக்கிப் பார்த்தபோது, அவருடைய மகத்தான இருதயம் எப்படியிருந்திருக்கும் என்பதை என்னால் அப்படியே யூகித்துப் பார்க்க முடிகிறது. அப்பொழுது அவள், “ஆண்டவரே, நீர் இங்கேயிருந்திருப்பீரேயானால் என் சகோதரன் மரித்திருந்திருக்கமாட்டான்” என்றாள். அவள் என்னக் கூறினாள் என்று கவனியுங்கள். “ஆனால் இப்பொழுதும் கூட, அவன் மரித்திருந்தாலும், தோல் புழுக்கள் அவனுடைய சரீரத்தினூடாக ஊர்ந்து கொண்டிருந்தாலும், இப்பொழுதும் கூட ஆண்டவரே, நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார்” என்றாள். 117 ஓ, அதுவே இரகசியமாய் உள்ளது. நீங்களோ, “நான் ஒவ்வொரு மருத்துவ மனையினூடாகவும் அலசிப் பார்த்துவிட்டேன். நான் மரிக்கப் போகிறேன் என்று மருத்துவர் கூறுகிறார், ஆனால் இப்பொழுதும் கூட ஆண்டவரே…நான் மூட்டுவீக்கத்தினால் முழுவதும் முடமுமாயிருக்கிறேன்; என்னால் அசைக்க முடியவில்லை, ஆனால் இப்பொழுதும் கூட ஆண்டவரே…” என்று கூறலாம். 118 அந்த சிறு குழந்தை கடந்த இரவு நீர்கோவை வியாதியினால் வீங்கிப்போன ஒரு பெரிய தலையினை உடையதாயிருந்தது. உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. அது பெரிதாக வீங்கி, அந்த சிறு தலையானது வெடித்து, அந்தக் குழந்தை மரித்துவிடும், “ஆனால் இப்பொழுதும் கூட ஆண்டவரே…” அவர் இன்னமும் மாறாத தேவனாயிருக்கிறார். அவர் இன்னமும் மாறாத கர்த்தராய் இருக்கிறார். “இப்பொழுதும் கூட ஆண்டவரே…” அவர் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருந்து, அவர் நமக்காக செய்துள்ளதாக நாம் உரிமை கோருகிற காரியங்களின் பேரில் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். 119 இப்பொழுது நான் உண்மையாகவே பக்திபரவசமடைகிறேன். நிச்சயமாகவே பக்திபரவசமடைகிறேன். நீங்கள் எப்படியும் என்னை பரிசுத்த உருளை என்று அழைக்கப் போகிறீர்கள், எனவே நீங்கள் அதை இப்பொழுதே அழைக்கத் துவங்கலாம், அதைக் கூறிவிடலாம். 120 ஆகையால், ஆம் ஐயா, “இப்பொழுதும் கூட ஆண்டவரே, நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ, அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார்.” 121 இயேசு, “என் நாமத்தில் பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன்” என்றார். 122 “இப்பொழுதும் கூட ஆண்டவரே, நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார்.” ஓ அது அவருடைய மகத்தான இருதயத்திற்கு பிடித்திருக்க வேண்டும். 123 அவர், “உன் சகோதரன் மீண்டும் பிழைப்பான்” என்றாள். 124 அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே. அவன் பிழைப்பான். அவன் ஒரு நல்ல பையனாயிருந்தான். அவன் பொதுவான உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளில் உயிர்த்தெழுவான்” என்றாள். யூதர்கள் பொதுவான உயிர்த்தெழுதலில் விசுவாசங்கொண்டிருந்தனர். “அவன் உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளில் உயிர்த்தெழுவான்.” 125 அவரை நோக்கிப் பாருங்கள். அவர் தன்னுடைய சரீரத்தை நிதானமாக வெளிப்படுத்தினார். அவர், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்றார். ஓ, என்னே. ஒரு மனிதனும் அதை ஒருபோதும் அதற்கு முன்பும் கூற முடியாததாயிருந்தது. அதற்குப் பின்னும் ஒருவரும் அதைக் கூற முடியாது. அவர் ஒருவரால் மாத்திரமே அதைக் கூற முடியும். “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று கர்த்தர் உரைக்கிறார். “என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாய?” என்றார். 126 அதற்கு அவள், “ஆம், ஆண்டவரே,” என்றாள். ஓ, ஏதோக் காரியம் சம்பவிக்கப் போவதாயிருந்தது என்பதை அவள் அறிந்திருந்தாள். சம்பவிக்க வேண்டியதாயிருந்தது. 127 உத்தமமான இருதயத்திலிருந்து வரும் விசுவாசமானது தேவனை சந்திக்கும்போது, பற்சக்கரங்கள் ஒன்றாக சேர்ந்து இணைந்துள்ளது போன்றிருக்கும். ஏதோக் காரியம் சம்பவிக்க வேண்டும். நான் இன்றிரவு இந்தக் கூட்டத்தாருக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சவாலிடுகிறேன், அதாவது உங்களுடைய விசுவாசம் அந்தவிதமாக தேவனோடு இணையட்டும், அப்பொழுது நாம் ஒரு சில நிமிடங்களிலேயே மற்றொரு பெந்தேகோஸ்தேவைப் பெற்றுக் கொள்வோம். அப்பொழுது அவர்களுக்கு இந்தப் பட்டிணத்தில் அப்பேர்ப்பட்ட ஒரு எழுப்புதல் உண்டாகும், அப்பொழுது அவர்களைக் கட்டுப்படுத்த தேசத்தில் போதிய காவல்காரர்கள் இருக்கமாட்டார்கள். அது உண்மை. அது உண்மையான ஒரு எழுப்புதலாய் இருக்கும். “இப்பொழுதும் கூட, ஆண்டவரே…” 128 “நல்லது, ஆண்டவரே, நாங்கள் இதை விட்டுவிட்டோம்; நாங்கள் இதை செய்துள்ளோம், அதை செய்துள்ளோம்” எனலாம். நீங்கள் என்ன செய்திருந்தாலும் நான் கவலைப்படுகிறதில்லை, “இப்பொழுதும் கூட ஆண்டவரே…” நீங்கள் அவரை அழைக்கும்படியாக உங்களுக்காக அவர் காத்துக்கொண்டிருக்கிறார். அவர்…“இதை விசுவாசிக்கிறாயா?” நிச்சயமாக. ஆம், ஐயா. இப்பொழுதும் கூட நீர் அவரிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ… 129 “நீங்கள் அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” இப்பொழுது அவர் கல்லறையண்டைக்குப் போகிறார். அவர் அழும்படியான மனிதனாயிருந்தார்; அவர் மரித்தோரை எழும்பும்படியாக தேவனாகவும் இருந்தார். 130 இங்கே கொஞ்சஙகாலத்திற்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட குழுவினரைச் சார்ந்த ஒரு ஸ்திரீ…நான் அந்த ஸ்தாபனங்களின் பெயரை குறிப்பிட்டுக் கூறும் ஒரு பழக்கத்தை எப்போதுமே உடையவனாயிருப்பதில்லை. ஆனால் இந்த ஸ்திரீ…இயேசு தெய்வீகமானவராயிருந்தார் என்று அவர்கள் விசுவாசிக்கிறதில்லை. அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார் என்றே அவர்கள் கூறினர். இப்பொழுது, அவர்…அவர் ஒரு தீர்க்கதரியாயிருந்திருந்தால், நாம் யாவரும் பாவத்தில் தான் இருக்கிறோம். அவர் தேவனாயிருந்தார், தேவனுக்கு கீழானவராயிருக்கவில்லை, அப்படி இல்லையென்றால் உலகத்தில் எப்போதும் இருந்ததிலேயே மிகப்பெரிய வஞ்சகனாயிருந்திருப்பார். அது உண்மை. அவர் ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானவராயிருந்தார். அவளோ, “அவர் தெய்வீவமானவராயிருக்கவில்லை” என்றாள். 131 இன்றைய இந்த சமூக சுவிசேஷத்தில் அதைக் குறித்து அதிகமான காரியம் உள்ளது; இயேசு கிறிஸ்துவை ஒரு தீர்க்கதரிசியாக்க முயற்சிக்கிறார்கள். ஏன்? அவர் தீர்க்கதரிசிகளின் தேவனாயிருந்தார். நிச்சயமாகவே அவர் அவ்வாறு இருந்தார். 132 அவள், “‘அவர் வெறுமென ஒரு மனிதனாயிருந்தார்’ என்று நான் உங்களுடைய வேதாகமத்தின் மூலம் அதை உங்களுக்கு நிரூபிப்பேன்” என்றாள். 133 அப்பொழுது நான், “நீ அதைச் செய்” என்றேன். 134 அதற்கு அவள், “அவர் லாசருவின் கல்லறைக்குச் சென்ற போது, வேதம், ‘அவர் கண்ணீர் விட்டார்’ என்று கூறியுள்ளதே. எனவே அவர் சாவுக்கேதுவான மனிதனாயிருக்க வேண்டியதாயிருந்தது இல்லையென்றால் அவர் கண்ணீர்விட்டிருக்க முடியாதே” என்றாள். 135 அதற்கு நான், “பெண்மணியே, அதுதான் உன்னுடைய வேதவாக்கியமா?” என்று கேட்டேன். நான் இங்கே இதைக் கூறி அவமதிப்பை உண்டுபண்ண வேண்டும் என்று பொருட்படுத்திக் கூறவில்லை, ஆனால் நான் அவளிடத்தில் என்னக் கூறினேனோ அதையே நான் உங்களுக்குக் கூறவுள்ளேன். 136 அவள், “அதுதான்” என்றாள். 137 அப்பொழுது நான், “அந்தக் கூற்று பட்டினி கிடந்தும் மரிக்கும் ஒரு கோழிக்குஞ்சியின் நிழலில் தாயாரிக்கப்பட்ட வடிசாறுக் குழம்பினைக் காட்டிலும் வலிமையற்றதுபோன்று ஒன்றுமற்றதாயுள்ளது” என்று கூறினேன். மேலும் நான், “நீங்கள்—நீங்கள் உறுதியாகக் கூறும்படி ஒன்றையுமே உடையவர்களாயிருக்கவில்லையே” என்றேன். 138 அதற்கு அவளோ, “காரணம், அவர் கண்ணீர்விட்டார். அது அவர் சாதுவுக்கேதுவான மனிதனாயிருந்தார் என்பதைக் காண்பித்தது” என்று கூறினாள். 139 அப்பொழுது நான், “அவர் சாதுவுக்கேதுவானவரும், சாவாமையுள்ளவருமாயிருந்தார். அவர் மாம்சத்தில் தேவனாயிருந்தார்” என்றார். 140 அதற்கு அவள், “ஓ, அர்த்தமற்றது” என்றாள். 141 அப்பொழுது நான், “அவர் கண்ணீர் விட்டுக்கொண்டு கல்லறைக்குச் சென்றார். அது உண்மைதான். ஆனால் அவர் தன்னைத் திடப்படுத்திக்கொண்டபோது…” என்றேன். வேதம், “அவருக்கு அழுகுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது” என்று கூறியுள்ளது. ஆனால் அவர் தன்னுடைய தோள்பட்டைகளை நிமிர்த்தி, “லாசருவே, வெளியே வா” என்று கூறினபோது, மரித்து நான்கு நாட்களாகி, கல்லறையில் அழுகிப் போயிருந்த மனிதன் வெளியே வந்தான். அதாவது ஒரு மனிதனைப் பார்க்கிலும் மேலானவராயிருந்தார். மனிதனால் அதைச் செய்ய முடியுமா என்று எனக்குக் காண்பியுங்கள்? அது என்னவாயிருந்தது? அழிவு தன்னுடைய எஜமானை அறிந்திருந்தது. ஜீவன் தன்னுடைய சிருஷ்டிகரை அறிந்திருந்தது. ஏதோக் காரியம் சம்பவிக்க வேண்டியதாயிருந்தது. அவர் மரித்துப் போய் நான்கு நாட்களாய் கல்லறையில் இருந்த ஒரு மனிதனிடத்தில் பேச, அவன் மீண்டும் எழும்பி வந்து நின்று ஜீவித்தான். அல்லேலூயா! அது தேவன் தம்முடைய குமாரனில் இருந்தார். ஆம், ஐயா. அதாவது தேவன் தம்மை அவர் மூலமாக, குமாரனினூடாக் தெரியப்படுத்திக் கொண்டிருந்தார். அது தேவன் பேசிக் கொண்டிருந்ததேயன்றி ஒரு மனிதன் அல்ல. 142 அவர் அந்த நாளிலே எதையாவது புசிக்கும்படியாக அந்த மரத்தின் மேல் சுற்றிப் பார்த்த போது, அவர் ஒரு மனிதனாயிருந்தார். அது ஒரு மனிதனாயிருந்தது. ஆனால் அவர் ஐந்து அப்பங்களையும், இரண்டு மீங்களையுங் கொண்டு ஐயாயிரம் பேரைப் போஷித்தபோது, அவர் ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானவராயிருந்தார். அது தேவன் அவர்களை அங்கே போஷித்துக் கொண்டிருந்ததாயிருந்தது. அவர் ஒரு தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேலானவராய், ஒரு மனிதனைப் பார்க்கிலும் மேலானவராயிருந்தார், அவர் தேவனும்-மனிதனுமாய் இருந்தார். நிச்சயமாக. 143 அவர் அந்த இரவு அந்த சிறிய படகின் பின்பகுதியில் படுத்திருந்தார், அப்பொழுது சமுத்திர அலைகள் அங்கே அந்த பலமான சமுத்திரத்தில் கொந்தளித்துக்கொண்டும், ஒரு குப்பியின் மூடிபோல துள்ளிக் குதித்துக்கொண்டுமிருக்க, அன்றிரவு அவரை சமுத்திரத்தில் அமிழ்த்திவிடுவோம் என்று பத்தாயிரம் பிசாசுகள் ஆணையிட்டிருந்தன. அவர் ஒரு மனிதனாய் வியாதியஸ்தருக்காக ஜெபித்ததினால் பெலவீனமாய், களைப்புற்று அங்கே பின்னேப் படுத்திருந்தார்; காற்று கூட அவரைத் தொந்தரவுபடுத்தவில்லை. அவர் உறங்கினபோது, அவர் ஒரு மனிதனாயிருந்தார், ஆனால் அவர் விழுத்தெழுந்து, படகில் கட்டப்பட்டுள்ள கயிற்றின் மேல் தம்முடைய பாதத்தை வைத்து, நோக்கிப் பார்த்து, “இரையாதே, அமைதலாயிரு” என்றபோது, காற்றும் அலைகளும் அவருக்குக் கீழ்படிந்தபோது, அவர் ஒரு மனிதனைப் பார்க்கிலும் மேலானவராயிருந்தார். அது தேவன் மனிதனுக்குள்ளிருந்து தம்மை தெரியப்படுத்திக் கொண்டிருந்ததாகும். அது உண்மை. 144 அவர் சிலுவையண்டை இரக்கத்திற்காக கதறினபோது, அவர் ஒரு மனிதனாயிருந்தார். அவர் கதறி, “நான் தாகமாயிருக்கிறேன்” என்று கூறினபோது, அவர் ஒரு மனிதனாயிருந்தார். அவர் மரித்தபோது, அவர் ஒரு மனிதனாயிருந்தார், ஆனால் ஈஸ்டர் காலையிலே அவர் மரணம், நரகம், கல்லறையின் முத்திரைகளை உடைத்து மீண்டும் உயித்தெழுந்தபோது, அவர் ஒரு மனிதனைப் பார்க்கிலும் மேலானவராயிருந்தார். அது தேவன் வெளிப்பட்டதாயிருந்தது. புலவன் இவ்வாறு கூறினதில் வியப்பொன்றுமில்லையே: ஜீவிக்கும்போது, அவர் என்னை நேசித்தார்; மரிக்கும்போது, அவர் என்னை இரட்சித்தார்; அடக்கம்பண்ணப்பட்டபோது, அவர் என் பாவங்களை அதிதூரம் கொண்டு போய்விட்டார்; உயிர்த்தெழுந்தபோது, அவர் இலவசமாய் என்றென்றைக்குமாய் நீதிமானாக்கினார்; என்றொ ஒரு நாள் அவர் வருகிறார்—ஓ, மகிமையான நாள்! 145 அவர், “நான் பிழைக்கிறபடியினால், நீங்களும் பிழைப்பீர்கள். இதை விசுவாசிக்கிறாயா?” என்றார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். இதை விசுவாசிக்கிறாயா? பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது இங்கே இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். இதை விசுவாசிக்கிறாயா? அவர் நம்மை அவருடைய பிரசன்னத்தினால் நிரப்புவார் என்று நான் விசுவாசிக்கிறேன். இதை விசுவாசிக்கிறாயா? பரிசுத்த ஆவியானவர் அவருடைய பிரசன்னத்தை ஊற்றி, எல்லா வியாதியஸ்தரையும் சுகப்படுத்தி, பரிசுத்த ஆவியைப் பெற்றிராத எல்லோரையும் பரிசுத்த ஆவியினால் நிரப்பும்படிச் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். இதை விசுவாசிக்கிறாயா? நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? நாம் எழும்பி நின்று அவருக்குத் துதி செலுத்துவோமாக. அவர் இப்பொழுதே நம்மீது விழுவார் என்று நான் விசுவாசிக்கிறேன். 146 ஓ தேவனாகிய கர்த்தாவே, வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனின் ஆக்கியோனே, ஒவ்வொரு நன்மையான ஈவையும் தருபவரே, நாங்கள் “இதை விசுவாசிக்கிறோம்,” கர்த்தாவே. அதாவது நீர் இங்கே கூட்டத்தில் இருக்கிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அதாவது நீரே எங்களுடைய ஆத்துமாக்களில் அந்த ஆசீர்வாதமாயிருக்கிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். நீர் உம்முடைய ஆவியை எங்கள் மீது ஊற்றுகிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். நீர் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறீர் என்றும், எங்களுடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம். வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் நாங்கள் என்றென்றென்றுமாய் உயிரோடிருப்போம், ஏனென்றால் நீர் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறீர். கர்த்தாவே, நீரே அதை எங்களுக்கு வாக்குப்பண்ணினீர். நாங்கள் அதை எங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறோம். கர்த்தாவே, எங்களுக்குள்ளாக இருக்கிற எல்லாவற்றோடும் நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன். 147 நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? அது பரிசுத்த ஆவியாயுள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். ஏதோ ஒன்று நம்மேல் விழுந்து கொண்டிருக்கிறது. இதை விசுவாசிக்கிறாயா? அவர் இப்பொழுதே ஒவ்வொரு நபரையும் சுகப்படுத்த விரும்புகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். இதை விசுவாசிக்கிறாயா? உங்களுடைய கரங்களை அவரண்டை உயர்த்துங்கள். எழும்பி நில்லுங்கள். இதை விசுவாசிக்கிறாயா? பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். அதுதான் இதுவாகும். பேதுரு, “அதுதான் இது” என்றான். அதுவே இது, பரிசுத்த ஆவியாகும். 148 ஓ கர்த்தாவே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, உம்முடைய வல்லமையை, உம்முடைய ஆசீர்வாதங்களை, உம்முடைய நன்மையை இந்த ஜனங்களின் மேல் அனுப்பும், அவர்களுடைய இருதயங்களை ஆசீர்வதியும், மனுஷகுமாரன் சாதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார் என்பதை அவர்கள் காணட்டும். ஓ கர்த்தாவே, அதை அருளும். நாங்கள் அவர்களை தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மண்டை அளிக்கிறோம். 149 பரிசுத்த ஆவியை எவரேனும் பெற்றிருக்கவில்லையென்றால், உங்களுடைய கரங்களை உயர்த்தி, தேவனைத் துதியுங்கள். அவர் உங்கள் மீது விழுவார் என்று நான் விசுவாசிக்கிறேன். யாராவது ஒருவர் உங்களுடைய கரங்களை அவர்கள் மீது வையுங்கள். இதுவே அந்த வேளையாயுள்ளது. நாம் இனி ஏன் காத்திருக்க வேண்டும்? இதுவே அந்த நேரமாயுள்ளது. இதுவே பெந்தேகோஸ்தேக்கான, தேவனண்டை திரும்பி வரும்படியான நேரமாய் உள்ளது, தேவனோடு சரிபடுத்திக் கொள்ளுங்கள், பெந்தேகோஸ்தே! ஜீவனுள்ள தேவனுடைய வல்லமையினால் உங்களுடைய இருதயத்தை எழுச்சியடையச் செய்யுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் அசைவாடி உங்களுடைய ஆத்துமாக்களை முழுவதுமாய் நிரப்பட்டும். அவர் இங்கே ஒவ்வொரு இரவும் இருக்கிறார், வியாதியஸ்தரை சுகப்படுத்த, குருடருக்கு பார்வையளிக்க இங்கிருக்கிறார், அவர் தாம் சதாகாலங்களிலும் மாறாதவராயிருக்கிறார் என்று நிரூபிக்கும்படியான மகத்தான, வல்லமை மிக்க வல்லமையினூடாக இங்கிருக்கிறார். அல்லேலூயா! 150 அவரை ஸ்தோத்தரியுங்கள். உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடுங்கள்; நீங்கள் அவரை, அவருடைய நன்மையை, அவருடைய மகிமையை, அவருடைய வல்லமையை, என்றென்றுமுள்ள அவருடைய கிருபையை சுற்றியிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் என்றென்றும் மாறாதவராயிருக்கிறார். கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. அல்லேலூயா? ஓ, அவருடைய பரிசுத்த நாமத்திற்கே ஸ்தோத்திரம். 151 ஓ, எவ்வளவு அற்புதமாயுள்ளது, அவர் எவ்வளவு வல்லமையுள்ளவராயிருக்கிறார். எத்தனை பேர் உங்களுடைய ஜீவியங்களை இப்பொழுதே புதிதாக தேவனுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். எத்தனைபேர் உங்களுடைய ஜீவியங்களை தேவனுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறீர்கள்? அதுதான் இது. உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். நாம் பெந்தேகோஸ்தேவைக் காண்போமாக. நாம் தேவனுடைய ஜனங்களைக் காண்போமாக. நான் என்னுடைய கரத்தை உயர்த்துவேன். “ஆண்டவரே, இதோ நான் இருக்கிறேன். என்னை அனுப்பும்.” கர்த்தாவே ஒரு தூதனை எடுத்து, பலிபீடத்தின் அக்கினியோடு, உம்முடைய வல்லமையை எங்கள் மேல் அனுப்பும். தேவனே, ஓ பிதாவே, உம்முடைய ஆவியின் பரிபூரணத்தில் அதை அருளும். ஓ, கர்த்தாவே, எங்களுடைய ஜெபத்திற்கு பதில் அளியும். விசுவாசிக்கின்ற பிள்ளைகளாய் நிற்கின்றபடியால் எங்களுடைய ஜெபத்திற்கு செவிகொடும். அவருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. 152 ஓ, மகிமையின் அலைகளைப் போல, ஓ, இரக்கத்தின் பனித்துளிகல் விழுகின்றன. ஓ, தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. எங்களுடைய ஆத்துமாக்கள் காத்திருப்பதாக. இதை விசுவாசிக்கிறாயா? இதை விசுவாசிக்கிறாயா? இதுவே பரிசுத்த ஆவி வருகிறதாய் உள்ளது. இதுவே தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள்ளாக, பெந்தேகோஸ்தே ஆசீர்வாதத்திற்குள்ளாக நம்மை விரட்டுகிற காணக்கூடாத வலிமையாய் உள்ளது. வீட்டிற்கு திரும்பி வாருங்கள். நீங்கள் வீட்டிற்குத் திரும்ப எதிர்பார்க்கப்படுகிறீர்கள். நீங்கள் விலையேறப்பெற்ற ஜனங்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களையே அர்ப்பணிக்கும்படிக்கே தேவன் விரும்புகிறார். ஸ்திரீகளே, உங்களை சுத்திகரியுங்கள். புருஷர்களே, உங்களை சுத்திகரியுங்கள். நாம் ஒரு உண்மையான சுத்த இருதயத்தோடு தேவனண்டை திரும்பி, தேவனை சேவிக்கத் துவங்குவோம். 153 தேவனுக்கு ஸ்தோத்திரம், பரிசுத்த ஆவியானவர் கூட்டத்தில் இருக்கிறார். நீங்கள் எதைச் செய்யும்படி நடத்தப்பட உணருகிறீர்களோ அதைச் செய்யுங்கள். அப்படியே பரிசுத்த ஆவியானவர் உங்கல் மேல் அசைவாடட்டும். என்னால் கூற முடிந்தது வேறொன்றுமில்லை. இப்பொழுது என்னக் கூற வேண்டும் என்றே எனக்குத் தெரியவில்லை. பரிசுத்த ஆவியானவர் அப்படியே கட்டிடம் முழுவதும் இருக்கிறார். கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. ஓ, அல்லேலுயா! அல்லேலுயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். எவ்வளவு அற்புதமாய், எவ்வளவு மகிமையாயுள்ளது…எவ்வளவு அழகாய், உங்களுடைய முகங்களின் மேல் காணப்படுகிற தேவனுடைய பரிசுத்தவான்களின் துதி, இங்கே அசைகிற பரிசுத்த ஆவியின் பிரசன்னம், ஏகமனதாய் உள்ள இந்த பெரிய திராளான கூட்டத்திலிருந்து அவருடைய மகிமையை எங்களுக்குக் காண்பிப்பதும், அவருடைய நாமத்தை ஸ்தோத்தரிப்பதும் எவ்வளவு அற்புதமானதாயுள்ளது. 154 வலப்பக்கமாகத் திரும்பி, யாருடனாவது கரங்களைக் குலுக்கி, “சகோதரனே, கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சகோதரியே, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று கூறுங்கள். நாம் சரிப்படுத்திக் கொள்வோமாக, தேவன் நம்மை எழுச்சியடையச் செய்யட்டும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அதுவே சரி. மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், பெந்தேகோஸ்துகள் மற்றும் ஏழாம் நாள் ஆசரிப்புக்காரர்களாகிய நீங்கள் எல்லோரும், நீங்கள் என்னவாயிருந்தாலும் தேவனாகிய கர்த்தருடைய பிரசன்னத்தில் ஒருவரோடு ஒருவர் கரங்களைக் குலுக்குங்கள். அதுதான் இது. ஒ, அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஓ, நான் அவர்களில் ஒருவனாயிருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஓ, சுவர்களை இடித்து, களிம்பை வெளியே எறிந்து போடுங்கள். மகிமை! கர்த்தருக்குள் விடுதலையாகி, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்…கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. ஓ, அல்லேலூயா! தேவனுக்கு ஸ்தோத்திரம். 155 ஓ, நான் அதைக் காண விரும்புகிறேன்; ஜனங்கள் ஒருவரோடு ஒருவர் கரங்குலுக்குவதையும், அவர்களுடைய முகங்கள் பிரகாசிப்பதையும் காண விரும்புகிறேன். தேவனுடைய வல்லமை, “அதுதான் இது. அதுதான் இது, நாங்கள் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். நாங்கள் எல்லோரும் ஒரே மகத்தான பெரிய சபையாய், கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரே மகத்தான பெரிய நபராய், அவருடைய மணவாட்டியாய், மகிமையான ஒன்றாயிருக்கிறோம்” என்று கூறுகிறது. கர்த்தருடைய வருகையோ சமீபித்திருக்கிறது. அவருடைய ஜனங்கள் தாமே ஒன்று சேர்ந்து அன்போடும், அவருடைய பிரசன்னத்தின் வல்லமையோடும்…நேசிக்கிறார்கள். ஓ, இது பரலோகம் போன்றே உள்ளது. ஓ, இது நன்மையானதாயுள்ளது. ஆமென். ஓ, அப்படியே கர்த்தரை ஆவியிலும், வல்லமையிலும் ஆராதிப்பது எவ்வளவு மகிமையாயும், எவ்வளவு அற்புதமாயுமுள்ளது. எப்பேர்ப்பட்ட ஒரு நேரம். அது நிறுத்த…துவக்கமாயிருந்தது. 156 அப்படியே ஒன்றுமில்லை…நான் சகோதரர்களிடத்தில், “சகோதரர்களே, நிறுத்தும்படியான எந்த இடமும் இல்லை” என்றேன். இங்கே அதற்கு எந்த இடமும் இல்லை…நாம் ஒருபோதும் துவங்கேயில்லை, எனவே நாம் நிறுத்துகிறதில்லை. அப்படியே—அப்படியே அற்புதமானது…அப்படியே கர்த்தருடைய பிரசன்னத்தை எத்தனை பேர் உண்மையாகவே நன்மையாக உணருகிறீர்கள்? ஓ, என்னே, கர்த்தருடைய பிரசன்னத்தில் இங்கே இருப்பது அற்புதமாயுள்ளது. 157 இப்பொழுது இங்கே வியாதியஸ்தரை சுகப்படுத்த, ஜனங்களை ஆரோக்கியமாக்கவே இங்கே கர்த்தருடைய பிரசன்னம் உள்ளது. அவரை விசுவாசியுங்கள். நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? நம் அவரை விசுவாசிக்க முடிந்தால் எல்லாம் கூடும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அது கர்த்தருடைய பிரசன்னமாயுள்ளது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 158 இப்பொழுது, நீங்கள்…அப்படியே சற்று நேரம், இப்பொழுது சற்று நேரம், அப்படியே சற்று நேரம் எனக்கு செவி கொடுங்கள். இங்கே இருப்பது பரிசுத்த ஆவி என்பதை நான் உங்களுக்கு நிரூபிக்கட்டும். பரிசுத்த ஆவியானவர், அந்த ஒருவரே பேசுகிறார் என்றும், அந்த ஒருவரே காரியத்தை செய்கிறார் என்றும், அதை அறிந்திருக்கிறார் என்றும் நான் உங்களுக்கு காண்பிக்கட்டும். இப்பொழுது இங்கே எத்தனைபேர் சுகவீனமாய் வந்திருக்கிறீர்கள்? நாங்கள் உங்களுடைய கரங்களை காணட்டும். சுகவீனமாயிருந்தவர்கள்…ஜனங்கள்… 159 அங்கே ஒரு மனிதன் நின்று கொண்டிருக்கிறார். திருவாளரே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அங்கே வெளியே ஜெப அட்டைகளே கொடுக்கப்படவில்லை. ஆனால் தேவனால் உங்களை குணப்படுத்த முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவரால் உங்களுடைய தொல்லையை என்னிடத்தில் கூற முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது உங்களுடைய பக்கவாட்டில் உள்ளது. நீங்கள் அறுவை சிகிச்சை செய்வதற்காக இருக்கிறீர்கள். அது உண்மை. உங்களுடைய பெயர் திரு.கார்ட்ரைட். அது உண்மை. அது சரிதானே? அப்படியானால் உங்களுடைய கரத்தை அசைத்துக் காட்டுங்கள். சரி. வீட்டிற்குப் போய் சுகமாயிருங்கள், உங்களுக்கு அறுவை சிகிச்சையே தேவைப்படாது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 160 அந்த மனிதன் தன்னுடைய கரங்களில் அந்தக் குழந்தையை வைத்துக்கொண்டிருக்கிறார், நீங்கள் என்னை தேவனுடைய ஊழியக்காரர் என்று விசுவாசிக்கிறீர்களா? இது பரிசுத்த ஆவியென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் உங்களை அறியேன், அது சரிதானே? என்னுடைய வாழ்க்கையில் உங்களை ஒருபோதும் கண்டேதேயில்லை; நாம் அந்நியர்களாயிருக்கிறோம். அந்தக் குழந்தையோடுள்ள காரியம் என்னவென்று பரிசுத்த ஆவியானவரால் என்னிடத்தில் கூற முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரும சிரங்கு பிடித்துள்ளது. அது உண்மை, அது சரிதானே? நிச்சயமாக. நீர் இந்தப் பட்டிணத்திலிருந்து வரவில்லை. இல்லை. உங்களுக்கு ஒரு வயிற்றுக் கோளாறும் உண்டு. நீர் தாமே அதனோடு அவதியுற்றுக் கொண்டிருக்கிறீர். அது உண்மை, அப்படியில்லையா? நீர் கான்சாஸ் பட்டிணத்திலிருந்து வந்திருக்கிறீர். சரி. திரும்பிச் செல்லுங்கள், இயேசு கிறிஸ்து உங்களை குணமாக்குகிறார். அல்லேலூயா! நீங்கள் விசுவாசியுங்கள். நீங்கள் அதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? 161 இங்கே கர்த்தருடைய தூதனானவர் இந்த சிறு உருவங்கொண்ட ஸ்திரீயின் மீது அசைவாடிகிறார், ஒருவிதமாக வயதில் மூத்தப் பெண்மணியாய் இங்கே அமர்ந்து கொண்டு ஒரு குடலிறக்க நோயினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறான். சகோதரியே, அந்த குடலிறக்கத்திலிருந்து தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உம்முடைய தொப்பியின் மேல் சிறிய சிவப்பு மலரோடு உள்ள நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். சரி. வீட்டிற்குச் சென்று சுகமாயிருங்கள். ஆமென். ஓ, அது தேவனாயுள்ளது; அது தேவ குமாரனாகிய கிறிஸ்துவாயுள்ளது. அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறார். அவர் இங்கே இருக்கிறார். 162 இப்பொழுது நான் யாராவது இங்கு வரும்படி கேட்டுக் கொள்கையில், உங்களுடைய கரங்களை ஒருவர் இன்னொருவர் மேல் வைத்து, அப்படியே ஒரு நல்ல சாரமுள்ள ஜெபத்தை நீங்கள் ஒவ்வொருவரும் ஏறெடுங்கள். சகோதரனே, இங்கே வாருங்கள். தேவன் சுகப்படுத்துகிறார் என்று காண்பிக்கும்படியாக நீங்கள் ஒருவர் மேல் ஒருவர் உங்களுடைய கரங்களை வைத்திருக்கும்போது, நானும் இங்கே ஜெபத்தை ஏறெடுக்கும்படியான இந்த சகோதரனை அழைத்துள்ளேன். (தொடர்ந்து ஜெபியுங்கள்.சரி) தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.